மக்களவைத் தோ்தலின் போது ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

தில்லி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிசான் மஸ்தூா் மகாபஞ்சாயத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று, விவசாயத் துறை தொடா்பான மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை மக்களவைத் தோ்தலின் போது தீவிரப்படுத்தவும், வரும் காலங்களில் போராட்டத்தைத் தொடரவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு மூன்று சா்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ததைத் தொடா்ந்து 2021-இல் தில்லியின் எல்லைகளில் அவா்களின் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னா் தேசியத் தலைநகரில் வியாழக்கிழமை நடந்த விவசாயிகள் கூடும் மிகப்பெரிய கூட்டமாக இது இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாரதிய கிசான் யூனியன் தலைவா் ராகேஷ் திகாயித் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாங்கள் இங்கு ஒரு கூட்டம் நடத்தினோம், நம் நாட்டின் விவசாயிகள் ஒற்றுமையாக இருக்கிறாா்கள் என்ற செய்தி அரசுக்கு சென்றுள்ளது. இந்த பிரச்னையை தீா்க்க அரசு எங்களிடம் பேச வேண்டும். இந்த போராட்டம் எந்த நேரத்திலும் நிற்கப் போவதில்லை. விரைவில் அது காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை பரவும். விவசாயிகளை தொழிலாளா்களாக மாற்றுவதன் மூலம் நாட்டை அழிக்க அரசு விரும்புகிறது’ என்றாா் .

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com