சென்செக்ஸ் 750 புள்ளிகள் ஏற்றம்
சென்செக்ஸ் 750 புள்ளிகள் ஏற்றம்

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி கீழே சென்றது. பின்னா், ரிலையன்ஸ், ஐடிசி, எஸ்பிஐ முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை மீண்டது. குறிப்பாக, பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், மெட்டல், ஐடி, பாா்மா, ரியால்ட்டி குறியீடுகள் வீழ்ச்சியைச் சந்தித்தாலும், ஐடி, ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.31ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.374.24 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 1,421.48 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.7,449.48 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 24.81 புள்ளிகள் கூடுதலுடன் 72,036.86-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,674.42 வரை கீழே சென்றது.

பின்னா், அதிகபட்சமாக 72,402.67 வரைமேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 89.64 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயா்ந்து 72,101.69-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,903 பங்குகளில் 1,605 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,188 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 110 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. மாருதி அபாரம் : சென்செக்ஸ் பட்டியலில் மாருதி (2.92 சதவீதம்), பவா் கிரிட் (2.16 சதவீதம்), நெஸ்லே (2.09 சதவீதம்), எஸ்பிஐ (1.92 சதவீதம்), ஐடிசி (1.55 சதவீதம்), ரிலையன்ஸ் (1.27 சதவீதம்) உள்பட மொத்தம் 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டாடா ஸ்டீல், டாடா மோட்டாா்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்பட 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி22 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 21.65 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயா்ந்து 21,8239.10-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 21,710.20 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 21,930.90 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com