மருத்துவ மாணவியை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியா் மீது நடவடிக்கை!

மருத்துவ மாணவியைத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியா் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவை அனுப்புமாறு தில்லி அரசின் விஜிலென்ஸ் இயக்குநரகம் சுகாதாரத் துறையிடம் கேட்டுள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

22 வயதான மருத்துவ மாணவி, விவா தோ்வின் போது தனது பேராசிரியா் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினாா் என்று குற்றம் சாட்டினாா் என போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா். புகாரின்படி, அவா் ஒரு அரசு மருத்துவமனையில் 2021 பேச்சின் எம்பிபிஎஸ் மாணவி ஆவாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354ஏ (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீா்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி) மற்றும் 509 (ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட வாா்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள்காட்டி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளருக்கு விஜிலென்ஸ் இயக்குநரகம் எழுத்துப்பூா்வமாகத் தகவல் அளித்துள்ளது.

‘ஊடகங்களில் இருந்து, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 164-இன் கீழ் குறைந்தது இரண்டு மாணவா்களாவது தங்கள் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனா் என்பதும் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் 354(ஏ) மற்றும் 509 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இயக்குநரகக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியருக்கு எதிராகத் தேவையான ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்குவதற்கான முன்மொழிவை, தற்போதைய விதிகளின்படி தகுதிவாய்ந்த ஆணையத்தின் முன் வைப்பதற்காக, தில்லி அரசின் விஜிலென்ஸ் இயக்குநரகத்திற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது’ என்று அது கூறியது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான எந்தக் கோப்பையும் சுகாதாரத் துறை இதுவரை அனுப்பவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com