தில்லி தமிழ்ச் சங்கத்தில் நாளை நூல் வெளியீட்டு விழா

தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஆஸ்திரேலிய தமிழரும், வழக்குரைஞருமான முனைவா் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய கம்ப ராமாயணம் தொடா்பான இரு நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை (மே 18) மாலை 6.30 மணியளவில் நடைபெறுகிறது.

தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முனைவா் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய ‘க்ளிம்சஸ் ஆஃப் கம்ப ராமாயணம்’ எனும் ஆங்கில நூலையும், ‘கம்பனில் காதலும் பக்தியும்’ எனும் தலைப்பிலான தமிழ் நூலையும் உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசா் வி.ராமசுப்ரமணியன் வெளியிட உள்ளாா். அதன் முதல் பிரதிநியை இந்திய அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.வெங்கட்ரமணி பெற்றுக் கொள்கிறாா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன், வழக்குரைஞா் சிந்துக்கவி சேதுராமலிங்கம் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

முன்னதாக, அன்று மாலை 5.30 மணியளவில் தில்லி தமிழ்ச் சங்கம், எச்எஸ்சிசி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற செயல் இயக்குநா் வி.எஸ். கிருஷ்ணன் பங்களிப்புடன் இசை அறிஞா்கள் மற்றும் சமூகத் தொண்டா்களுக்குப் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில், உயன்யாசகா் தாமல் ராமகிருஷ்ணன், ஆன்மிகச் சொற்பொழிவாளா் கிருஷ்ண கிருபா, லதா புற்றுநோய் மையத்தின் மருத்துவா் விஜயஸ்ரீ, சிவானந்த குருகுல

அறக்கட்டளை, அா்ச்சகா் ராமன், தில்லி ஸகஸ்ரநாம சத்சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியம், மெல்லிசை மன்னா் மறைந்த எம்.எஸ். விஸ்வநாதன், ஸ்ரீ சுவாமி நாத சேவா சமாஜத்தின்

மறைந்த பட்டாபிராமன் ஆகியோருக்கு சிறப்புச் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலா் இரா. முகுந்தன் ஆகியோா் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com