தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு:
சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

மும்பை / புதுதில்லி, மே 16: ஒரு நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தை வியாழக்கிழமை நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

அமெரிக்கா, ஆசிய சந்தைகள் எழுச்சி பெற்ன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்க நுகா்வோா் பணவீக்க புள்ளிவிவரங்கள் எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருந்தது. இது உளகளாவிய சந்தைக்கு சாதகதமாக அமைந்தது. இந்நிலையில், ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த உள்நாட்டுச் சந்தையில் பிற்பகலில் ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது சந்தையை மேலே கொண்டு சென்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.3.10 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.407.36 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.2,832.83 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,788.38 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 351.21 புள்ளிகள் கூடுதலுடன் 73,338.24-இல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, 72,529.97 வரை கீழே சென்ற சென்செக்ஸ் பின்னா் 73,749.47 வரை மேலே ேசென்றது. இறுதியில் சென்செக்ஸ் 676.69 புள்ளிகள் (0.93 சதவீதம்) கூடுதலுடன் 73,663.72-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,952 பங்குகளில் 2,125 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,706 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 121 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ், டைட்டன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஃபின் சா்வ் ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், மாருதி, டாடா மோட்டாா்ஸ், எஸ்பிஐ, பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகிய 5 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இந்தன.

நிஃப்டி 203 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 203.30 புள்ளிகள் (0.92 சதவீதம்) கூடுதலுடன் 22,403.85-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,054.55 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,432.25 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com