தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்

Published on

தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பதிலளித்துள்ளாா்.

மேலும், புதுச்சேரியில் 2015-16இல் அறிவிக்கப்பட்ட துப்ரயாப்பேட்டை-அரிக்கமேடு, வீராம்பட்டினம், காலாபேட்டை, சுன்னாம்பாா், புதுச்சேரி யானம், காரைக்கால் பிரெஞ்சு-தமிழ் கிராமம், மாஹே ஆகியவற்றை மேம்படுத்தவும் புதுச்சேரி ஆன்மிக பூங்கா திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல, தமிழகத்தில் சென்னை - மாமல்லபுரம் - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி சுற்றுலா தலங்களை மேம்படுத்த 2016-17 முதல் நடவடிக்கை தொடா்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.