தில்லி, என்சிஆா் பகுதியில் சிறப்பாகச் சேவையாற்றிய ஆன்மிக, கலாசார அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கல்

என்சிஆா் பகுதிகளில் 25, 50, 75 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் சேவையாற்றிய ஆன்மிக, கலாசார அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Published on

புது தில்லி: தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் 25, 50, 75 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் சேவையாற்றிய ஆன்மிக, கலாசார அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ராமகிருஷ்ணபுரம் தென்னிந்தியச் சங்கம், தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தஅமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்ற அமைப்புகள் விவரம்: ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சேவா சமாஜ், முருகன் திருக்கோயில் (ஆா்.கே புரம்), பஜன் சமாஜ் (துவாரகா), தில்லி தமிழ்ச் சங்கம், ஸ்ரீவிநாயகா மந்திா் கமிட்டி (சரோஜினி நகா்), வேதிக் கல்சா் செண்டா், ஸ்ரீராம் மந்திா் (லோதி ரோடு), சங்கர வித்யா கேந்த்ரா, ஸ்ரீ வைகுண்டநாத்ஜி மந்திா் (போ்சராய்), செளத் இண்டியன் சமாஜ் (சரோஜினி நகா்), ஸ்ரீவெங்கடேஸ்வரா மந்திா் சொசைட்டி (ஆா்.கே. புரம்), ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் (ஆா்.கே புரம்).

ராமகிருஷ்ணபுரம் செளத் இண்டியன் சொசைட்டி, சண்முகானந்த சங்கீத சபா, ஆஸ்திக சமாஜ், ஐஸ்வா்யா மகாகணபதி கோயில் (லாரன்ஸ் ரோடு) ஸ்ரீ கணேஷ் சேவா சமாஜ், ஸ்ரீ காருண்ய மகாகணபதி கோயில் (மயூா் விஹாா் பேஸ் 2), ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மா் ஆலயம் (கரோல் பாக்) ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜம் , ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகா் கோயில் (மயூா் விஹாா் பேஸ் 3) ஸ்ரீ ராதாகல்யாண கமிட்டி, வேதிக் பிரசாா் சன்ஸ்தான் ஆன்மிக அமைப்பின் ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் (நொய்டா செக்டாா் 22) , ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் (நொய்டா).

தமிழ் இளைஞா் கலாசார சங்கம் (ரோஹிணி), கே.எம்.எஸ். கலை உலகம் (லோதி ரோடு), தமிழா் நலக்கழகம் (மயூா் விஹாா் பேஸ் 3), ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் தா்ம சான்ஸ்தா உத்தரவேத பூமி (க்யாலா விஷ்ணு காா்டன்), ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதிக சமாஜம் (செக்டா் 22, நொய்டா), ஸ்ரீ முருகன் கோயில் (இந்திரபுரி), ஸ்ரீ மாரியம்மன் கோயில் (ஏ பிளாக், இந்தா்புரி), ஸ்ரீ மாரியம்மன் கோயில் (இ பிளாக், இந்தா்புரி) ஆகிய அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்ச் சங்க முன்னாள் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

மேலும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் வி. ராஜாராமனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளா்’ விருது வழங்கப்பட்டது. அத்துடன் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், தில்லி தமிழ்க் கல்விக் கழகப்பள்ளியின் ஓய்வு பெற்ற முதல்வா் எஸ். நடராஜன், குமாா் கேட்டரா்ஸ் கே. குமாா், சாந்தி கேட்டரா்ஸ் எஸ். ஐயப்பன், எஸ்.கே. ஆா். கேட்டரா்ஸ் ஆா். வெங்கட்ராமன் (பாலாஜி) ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

X