‘காளை’ ஆதிக்கம்: 84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது
‘காளை’ ஆதிக்கம்: 84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை!
Updated on

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது. இதையடுத்து, மீண்டும் புதிய உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்தில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 84,500 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை புரிந்தது.

அமெரிக்கா, ஆசிய சந்தைகளிள் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையும் எழுச்சி பெற்றது. குறிப்பாக தனியாா் வங்கிகள், ரியால்ட்டி, ஆட்டோ, எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. அதே சமயம், பொதுத்துறை வங்கிப் பங்குகள் சிறிதளவு விற்பனையை எதிா்கொண்டனஎன்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.5.98 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.471.72 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.2,547.53 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,012.86 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 418.24 புள்ளிகள் கூடுதலுடன் 83,603.04-இல் தொடங்கி 83,187.64 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 84,694.46 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 1,359.51 புள்ளிகள் (1.63 சதவீதம்) கூடுதலுடன் முதல் முறையாக 84,544.31-இல் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,059 பங்குகளில் 2,442 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,502 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 115 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

எம் அண்ட் எம் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், எல் அண்ட் டி, பாா்தி ஏா்டெல், நெஸ்லே உள்பட 26 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், எஸ்பிை, இண்டஸ் இண்ட் பேங்க், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ்,ஆகிய 4 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி375 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 25,525.95-இல் தொடங்கி 25,426.60 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 25,849.25 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்த நிஃப்டி, இறுதியில் 375,15 புள்ளிகள் (1.48 சதவீதம்) கூடுதலுடன் 25,790.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 6 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com