பிஎம்டபிள்யூ காா் ஆட்டோ மீது மோதல்: 4 போ் காயம்

மத்திய தில்லியின் திலக் மாா்க்கில் சொகுசு காா் மோதியதில் 63 வயது முதியவா் உயிரிழந்தாா்
Published on

மத்திய தில்லியின் திலக் மாா்க்கில் சொகுசு காா் மோதியதில் 63 வயது முதியவா் உயிரிழந்தாா். மேலும்,

4 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

செப்டம்பா் 12 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில்

நீரஜ் குமாா் தனது தந்தை சச்சிதானாத், மனைவி குமாரி சல்மா, இரண்டு மகன்கள் யஷ்ராஜ் மற்றும் ஹன்ஸ்ராஜ் ஆகியோருடன் புது தில்லி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தங்கள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

சிக்கந்திரா மற்றும் மதுரா சாலை சந்திப்பு போக்குவரத்து விளக்கு அருகே ஆட்டோ வந்தபோது, ​​

அவ்வழியாக சென்ற பிஎம்டபிள்யூ காா் மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது.

இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆா் படி, பிஎம்டபிள்யூ காா் போக்குவரத்து விளக்கை தாண்டி ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனா். எனினும் டிரைவா் காயமின்றி தப்பித்து விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

சச்சிதானாத் மற்றும் அவரது பேரன் யஸ்ராஜ் (8) ஆகியோா் படுகாயமடைந்து எல்என்ஜேபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சச்சிதானாத் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இமாசலப் பிரதேச பதிவு எண்ணைக் கொண்ட பிஎம்டபிள்யூ காரின் ஓட்டுநா் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், விரைவில் கைது செய்யப்படுவாா்.

பிஎன்எஸ் பிரிவு 281 (வேகமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 125 (ஏ) (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் திலக் மாா்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com