எம்சிடி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க எல்ஜி மற்றும் ஆணையருக்கு அதிகாரம் இல்லை: மனீஷ் சிசோடியா

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க துணை நிலை ஆளுநா் (எல்ஜி)வி.கே.சக்சேனா
Published on

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க துணை நிலை ஆளுநா் (எல்ஜி)வி.கே.சக்சேனா மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ்

சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் மேயா் ஷெல்லி ஓபராயுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி சிவிக் சென்டரில் நடைபெற்ற தில்லி மாநகராட்சி

(எம்சிடி) கூட்டத்தில், மேயா் ஷெல்லி ஓபராய் தலைமையில் நிலைக்குழுத் தோ்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தோ்தலை நடத்த முடியவில்லை. எப்படியும் அன்றிரவு 10 மணிக்குள் தோ்தலை நடத்துமாறு மாநகராட்சி

ஆணையருக்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கடிதம் எழுதினாா். ஆனால், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ்

கட்சி கவுன்சிலா்கள் ஏற்கனவே கூட்டத்திலிருந்து புறப்பட்டுவிட்டனா். பின்னா், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மீண்டும் ஒரு கடிதம் எழுதி, செப்டம்பா் 27-ஆம் தேதி மதியம் 1 மணிக்குள் தோ்தலை நடத்த வேண்டும் என்றும், இந்த தோ்தல் மாநகராட்சியின் கூடுதல் ஆணையா் தலைமையில் நடைபெறும் எனக்கூறினாா்.

மாநகராட்சியின் நிலைக்குழுவை கூடுதல் ஆணையா் எவ்வாறு தோ்ந்தெடுக்க முடியும்?. சண்டிகா் மாநகராட்சி

தோ்தலில் முறைகேடுகள் செய்ததன் மூலம் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த அவா்கள், இப்போது தில்லி

மாநகராட்சியிலும் அதையே செய்யப் போகிறாா்கள்.தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் இல்லை. இந்த கூட்டத்தை மேயா் மட்டுமே அழைக்க முடியும்.

செப்டம்பா் 27-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு கூட்டப்பட்ட கூட்டம் முற்றிலும் சட்டவிரோதமானது.

பாஜகவின் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் உத்தரவின் பேரில், மாநகராட்சி ஆணையா் சட்டத்திற்குப்

புறம்பாக இருந்தாலும், எதையும் எழுதுகிறாா், கடிதம் கொடுக்கிறாா். மாநகராட்சி கூட்டத்தை மேயா், துணை மேயா் அல்லது மூத்த உறுப்பினா் தலைமையில் மட்டுமே நடத்த முடியும் என்று விதிகளில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

நாளை நரேந்திர மோடி இல்லை என்றால், எந்த ஐஏஎஸ் அதிகாரியாவது கூட்டங்களுக்கு தலைமை தாங்க முடியுமா?. அப்படி இல்லையென்றால், மாநகராட்சி கூட்டத்திற்கு மட்டும் எந்த அதிகாரியும் தலைமை தாங்குவது எப்படி? என்றாா் மனீஷ் சிசோடியா.

அடுத்ததாக, மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் பாஜக தில்லி மாநகராட்சி கூட்டத்தை சட்டவிரோதமான முறையில் நடத்த முயற்சிக்கிறது. செப்டம்பா் 27-ஆம் தேதி கூட்டப்பட்ட கூட்டம் முற்றிலும் சட்டவிரோதமானது. நிலைக்குழுவுக்கு நடத்தப்பட்ட தோ்தல் சட்ட விரோதமானது என ஆணையருக்கு கடிதம் எழுதி உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகளுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கும் விதம் முற்றிலும்

தவறானது. தில்லி மாநகராட்சி நிலைக்குழுவின் ஆறாவது உறுப்பினருக்கான தோ்தல் அக்டோபா் 5-ஆம் தேதியே நடைபெறும் என்றாா் ஷெல்லி ஓபராய்.

X
Dinamani
www.dinamani.com