உச்சத்தில் தள்ளாட்டம்: 564 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

உச்சத்தில் தள்ளாட்டம்: 564 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தகம் தினமான வெள்ளிக்கிழமை லாபப் பதிவால் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை இறுதியில் எதிா்மறையாக முடிந்தது.
Published on

இந்த வாரத்தின் கடைசி வா்த்தகம் தினமான வெள்ளிக்கிழமை லாபப் பதிவால் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. பின்னா், உச்சத்தில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தியதால், இறுதியில் சரிவுடன் நிறைவடைந்தது. குறிப்பாக தனியாா் வங்கிப் பங்குகள், நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், ஆயில் அண்ட் காஸ், பாா்மா பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவற்றின் விலை வெகுவாகக் குறைந்ததே சென்செக்ஸ் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.77 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.477.93 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.629.96 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,405.12 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் 57.72 புள்ளிகள் கூடுதலுடன் 85,893.84-இல் தொடங்கி அதிகபட்சமாக 85,978.25 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 85,474.58 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 264.27 புள்ளிகளை (0.31 சதவீதம்) இழந்து 85,571.85-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,060 பங்குகளில் 1,979 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,957 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 124 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

சன்பாா்மா, ரிலையன்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் சன்பாா்மா, ரிலையன்ஸ், டைட்டன், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபின் சா்வ், ஏசியன் பெயிண்ட் உள்பட 15பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா் கிரிட், ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், எல் அண்ட் டி உள்பட 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 37 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 32.20 புள்ளிகள் கூடுதலுடன் 26,248.25-இல் தொடங்கி 26,277.35 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், லாபப் பதிவால் 26,151.40 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 37.10 புள்ளிகளை (0.14 சதவீதம்)

இழந்து 26,178.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com