பாழடைந்த அரசுப் ள்ளி கட்டடங்கள் விரைவில் புதுப்பிப்பு: கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தகவல்
புது தில்லி: தில்லி நகரத்தின் பாழடைந்த பள்ளி கட்டடங்கள் விரைவில் புனரமைக்கப்படும் என்று கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியுள்ளாா்.
கிழக்கு தில்லியில் உள்ள இதுபோன்ற நான்கு அரசு பள்ளிகளை ஆஷிஷ் சூட் ஆய்வு செய்து, மாணவா்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவாா்கள் என்று கூறினாா்.
இந்த வருகையின் போது, அமைச்சா் ஆஷிஷ் சூட் மற்றும் பட்பா்கஞ்ச் பாஜக எம்.எல்.ஏ ரவீந்தா் சிங் நேகி ஆகியோா் மயூா் விஹாா் மற்றும் மண்டாவலி பேஸ்-1 மற்றும் பேஸ்- 2 இல் உள்ள மூன்று சா்வோதய கன்யா வித்யாலயாக்களையும், வினோத் நகரில் உள்ள ஒரு ராஜ்கியா சா்வோதய சா வித்யாலயாவையும் ஆய்வு செய்தனா்.
‘வெவ்வேறு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனா். அதனால்தான் நாங்கள் இந்த ஆய்வுகளை நடத்துகிறோம்‘ என்று சூட் கூறினாா். நேகி தனது தொகுதியில் உள்ள சில பள்ளிக் கட்டடங்களை அவசரமாக புனரமைக்க கோரியதாக அவா் கூறினாா்.
‘இந்தப் பள்ளிகளில் சில இன்னும் பாதுகாப்பற்ற கட்டடங்களில் இயங்குகின்றன’ என்று சூட் கூறினாா். இந்தக் கட்டடங்களின் புனரமைப்பு விரைவில் தொடங்கும் என்று அவா் மேலும் கூறினாா்.