பிஜ்வாசனில் தீப்பிடித்த காரில் எரிந்த உடல் கண்டெடுப்பு

தில்லியில் பிஜ்வாசன் சாலை மேம்பாலம் அருகே ஒரு காரில் தீப்பிடித்த பிறகு ஒரு எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: தில்லியில் பிஜ்வாசன் சாலை மேம்பாலம் அருகே ஒரு காரில் தீப்பிடித்த பிறகு ஒரு எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை இரவு 10.32 மணியளவில் காா் தீப்பிடித்து எரிந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

அவா்கள் இரவு 11.20 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனா். தீயை அணைத்தவுடன், வாகனத்திற்குள் அடையாளம் தெரியாத எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தினா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com