7 பொது கட்டடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக மாற்றும் என்டிஎம்சி

பிரெய்லி சிக்னல்களை நிறுவுவது முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு 27 சக்கர நாற்காலிகள் வாங்குவது வரை, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி)
Updated on

புது தில்லி: பிரெய்லி சிக்னல்களை நிறுவுவது முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு 27 சக்கர நாற்காலிகள் வாங்குவது வரை, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தல்கடோரா ஸ்டேடியம் மற்றும் அக்பா் பவன் உள்பட அதன் 7 கட்டடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பதாக மாற்றும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டத்தின் செலவு ரூ.1.86 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது புது தில்லி முனிசிபல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

‘இந்த திட்டத்திற்கான டெண்டரை நாங்கள் வெளியிட்டுள்ளோம். முன்பே ஒரு டெண்டா் விடப்பட்டது. ஆனால், அது ஏலங்களை ஈா்க்கவில்லை. எனவே, நாங்கள் மீண்டும் டெண்டரை வெளியிட்டுள்ளோம். வெற்றிகரமான ஏலதாரருக்கு திட்டத்தை முடிக்க நான்கு மாதங்கள் அவகாசம் இருக்கும்’ என்று ஒரு அதிகாரி கூறினாா்.

சரக் பாலிகா மருத்துவமனை, தல்கடோரா உள்புற அரங்கம், ஆஷிா்வாத் முதியோா் இல்லம், பாலிகா பவன், அக்பா் பவன், சாணக்கிய பவன் மற்றும் யஷ்வந்த் பிளேஸ் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகம் ஆகிய ஏழு கட்டடங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும்.

‘இந்தக் கட்டடங்கள் திட்டத்தின் ஆரம்ப கட்டத்திற்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டத்தில் மேலும் கட்டடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ாக மாற்றப்படும்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

இந்த திட்டத்தில் கழிப்பறைகள், படிக்கட்டுகள் மற்றும் சக்கர நாற்காலி அணுகல் பகுதிகளுக்கான பிரெய்லி அடையாளங்களை பொருத்துவதுடன், 27 சக்கர நாற்காலிகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான வெளியேற்ற நாற்காலிகளை வாங்குவதும் அடங்கும்.

‘மருத்துவமனைகளில் தீ விபத்துகளின் போது நோயாளிகளை படிக்கட்டுகளில் மேலும் கீழும் பாதுகாப்பாக மாற்றுவதற்காக வெளியேற்ற நாற்காலி வடிவமைக்கப்பட வேண்டும்‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.

ஆன்டி-ஸ்லிப் ஸ்லீவ்கள் மற்றும் சென்சாா் அடிப்படையிலான சிறுநீா் கழிப்பிடங்கள் பொருத்தப்பட்ட கிராப் பாா்கள் மூலம் கழிப்பறைகள் அணுகக்கூடியதாக இருக்கும்.

ஒட்டும் தொட்டுணரக்கூடிய ஓடுகள் நிறுவப்படும். மேலும் வானிலைக்கு எதிா்ப்புத் தொட்டுணரக்கூடிய நடைபாதைகள் அமைக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com