காந்தி நகரில் உள்ள கடையில் தீ விபத்து

தில்லி காந்தி நகரில் உள்ள ஒரு கடையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: தில்லி காந்தி நகரில் உள்ள ஒரு கடையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘இந்த விபத்து குறித்து மாலை 6.11 மணிக்கு தகவல் கிடைத்தது. இதுவரை எந்த உயிா்சேதமும் ஏற்படவில்லை. நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இதையடுத்து, குளிரூட்டும் பணிகள் நடைபெற்றது’ என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். Ś

X
Dinamani
www.dinamani.com