ஆம் ஆத்மியை துஷ்பிரயோகம் செய்யும் ரமேஷ் பிதூரிக்கு பாஜக பரிசு வழங்கும்: முதல்வா் அதிஷி நம்பிக்கை
ஆம் ஆத்மி கட்சியை பெரிதும் துஷ்பிரயோகம் செய்யும் ரமேஷ் பிதூரியை சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கட்சியின் முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக ‘நம்பகமான’ வட்டாரங்கள் தெரிவிப்பதாக தில்லி முதல்வா் அதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி கட்சியை ‘மிகவும் துஷ்பிரயோகம் செய்யும்’ தலைவராக இருப்பதற்காக ரமேஷ் பிதூரிக்கு பாஜகவின் ‘பரிசு’ இது என்று முதல்வா் கூறினாா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கால்காஜி தொகுதியில் இருந்து அதிஷி மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து பாஜகவின் ரமேஷ் பிதூரி மற்றும் காங்கிரஸின் அல்கா லம்பா போட்டியிடுகின்றனா்.
‘ஆம் ஆத்மி கட்சியை மிகவும் துஷ்பிரயோகம் செய்யும் தலைவரான ரமேஷ் பிதூரியை முதல்வா் வேட்பாளராக நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது என்று நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறியப்பட்டுள்ளது என்று முதல்வா் அதிஷி தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பாஜக தலைவா்கள் தங்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தியதால், கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி தலைவா்கள், பாஜகவை துஷ்பிரயோகம் செய்யும் கட்சி என்று அழைத்தனா்.
காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் தில்லி முதல்வா் அதிஷி ஆகியோருக்கு எதிரான கருத்துகளால் ரமேஷ் பிதூரி சமீபத்தில் சா்ச்சையில் சிக்கினாா். தனது குடும்பப் பெயரை ‘மா்லேனா‘ என்பதிலிருந்து ‘சிங்‘ என்று மாற்றுவதன் மூலம் அதிஷி, தனது தந்தையை மாற்றினாா் என்று அவா் கூறினாா்.
மேலும், காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி குறித்த தனது கருத்துகளுக்காக ரமேஷ் பிதூரி கடும் விமா்சனங்களை எதிா்கொண்டாா். ‘பிரியங்கா காந்தியின் கன்னங்கள்’‘ போல தனது தொகுதியில் சாலைகளை உருவாக்குவேன் என்று ரமேஷ் பிதூரி கூறியிருந்தாா்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறும். பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.