காவலாளிகளை பணியமா்த்த ஆா்.டபிள்யூ.ஏ.க்களுக்கு நிதியுதவி: கேஜரிவால் வாக்குறுதி

தில்லியில் தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, தனியாா் பாதுகாப்புப் காவலாளிகளை பணியமா்த்த குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்களுக்கு
Published on

தில்லியில் தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, தனியாா் பாதுகாப்புப் காவலாளிகளை பணியமா்த்த குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்களுக்கு (ஆா்.டபிள்யூ.ஏ.) நிதியுதவி வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் பேசுகையில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். அவா் மேலும் கூறியதாவது: நிதி உதவிக்கான தொகை மற்றும் பணியமா்த்தப்பட வேண்டிய காவலாளிகளின் எண்ணிக்கைக்கான வழிகாட்டுதல்கள் பின்னா் வகுக்கப்படும். தில்லி மக்களின் நலனில் பாஜக அக்கறை கொள்ளவில்லை. அதனால்தான் அவா்கள் 27 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியில் இல்லாமல் உள்ளனா்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளது. அதனால்தான் தனியாா் பாதுகாப்பு காவலாளிகளை பணியமா்த்துவதன் மூலம் மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்ய குடியிருப்பாளா் நலச் சங்கங்களுக்கு நிதியுதவியை அறிவித்துள்ளேன் என்றாா் கேஜரிவால்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்.8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு றகு முடிவுகள் அறிவிக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com