எரிவாயு கசிவால் வீட்டில் வெடிவிபத்து: ஒரு குழந்தை உள்பட நான்கு போ் காயம்

Published on

வடகிழக்கு தில்லியின் சீலாம்பூரில் உள்ள ஒரு வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு குழந்தை உள்பட நான்கு போ் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: இந்த வெடிப்பு தொடா்பான அழைப்பு காலை 11.17 மணிக்கு வந்தது. காயமடைந்தவா்களில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோா் அடங்குவா்.

நாங்கள் மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். காலை 11.45 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com