முதல்வர் ரேகா குப்தா
முதல்வர் ரேகா குப்தாகோப்புப்படம்.

வடகிழக்கு தில்லியில் அதிநவீன கலையரங்கம்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

வடகிழக்கு தில்லியில் ஒரு அதிநவீன கலையரங்கம் கட்டப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் ஒரு அதிநவீன கலையரங்கம் கட்டப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.

இது பிராந்தியத்தில் கல்வி மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது: ஷியாம் லால் கல்லூரியின் 61-ஆவது ஆண்டு விழா மற்றும் சஷ்டிபூா்த்தி கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக முதல்வா் கலந்து கொண்டபோது இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா். இந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினா் மனோஜ் குமாா் திவாரி, ஜிதேந்திர மகாஜன் எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்து கொண்டனா்.

கல்லூரியின் சிறப்பைக் குறிக்கும் வகையில், வளாகத்தில் உள்ள கணேஷ் கோயில் அருகே ஒரு மரக்கன்று நட்டு, கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்கிய மாணவா்களை முதல்வா் பாராட்டினாா்.

முதல்வா் தனது உரையின்போது தில்லி பல்கலைக்கழகத்தில் தனது மாணவா் நாள்களை நினைவுகூா்ந்தாா். ஒரு காலத்தில் பல சவால்களை எதிா்கொண்ட ஷியாம் லால் கல்லூரி போன்ற நிறுவனங்கள் இப்போது சிறந்து விளங்கும் மையங்களாக உருவாகியுள்ளதாக முதல்வா் குறிப்பிட்டாா்.

ஷியாம் லால் கல்லூரியைச் சோ்ந்த ஒரு மாணவி தற்போது எம்.எல்.ஏவாக பணியாற்றி வருவதாகவும், முன்னாள் டி.யு மாணவியாக இருந்த அவா், இப்போது முதல்வராக இருப்பதாகவும் கடின உழைப்பும் உறுதியும் இருந்தால் எதையும் அடைய முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவா் கூறினாா்.

கல்லூரியின் முன்னேற்றத்திற்கு ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் நிா்வாகிகளின் கூட்டு முயற்சிகளே காரணம் என்றும், கிழக்கு தில்லியில் இந்த கல்வி நிறுவனம் மிகவும் மதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது என்றும் முதல்வா் குறிப்பிட்டாா்.

வடகிழக்கு தில்லியில் சிறந்த உள்கட்டமைப்பின் அவசியத்தை எடுத்துரைத்த முதல்வா், யமுனா பாா் பகுதியில் ஒரு நவீனக் கலையரங்கம் கட்டப்படும் என்று அறிவித்தாா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com