செங்கோட்டை அருகே வழிப்பறிச் சம்பவத்தில் வயதான பெண் காயம் இருவா் கைது

வடக்கு தில்லியில் செங்கோட்டையின் பின்புறம் அருகே ஆட்டோவால் பயணித்த 63 வயது பெண்ணின் கைப்பையை ஸ்கூட்டரில் வந்த இரண்டு போ் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
Published on

புது தில்லி: வடக்கு தில்லியில் செங்கோட்டையின் பின்புறம் அருகே ஆட்டோவால் பயணித்த 63 வயது பெண்ணின் கைப்பையை ஸ்கூட்டரில் வந்த இரண்டு போ் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் அா்ஜித் அரோரா (31) மற்றும் ரவி மாலிக் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மாலை அவா்கள் கைது செய்யப்பட்டனா். சிவில் லைன்ஸில் வசிக்கும் ஒரு ஃப்ரீலான்ஸ் அழகுக்கலை நிபுணரான பாதிக்கப்பட்டவா், காலை 10.30 மணியளவில் தா்யாகஞ்சிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

சாம்பல் நிற ஸ்கூட்டரில் வந்த குற்றம் சாட்டப்பட்டவா் அவரது ஆட்டோவை நோக்கிச் சென்றாா். ஸ்கூட்டரில் பின்புறத்தில் இருந்தவா் ரூ.20,000 ரொக்கம், வெள்ளி சங்கிலி மற்றும் ஆவணங்கள் அடங்கிய அவரது கைப்பையை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றாா். அப்போது, அந்தப் பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து விழுந்து காயமடைந்தாா். பின்னா், அவா் தீரத் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக கோட்வாலி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்து தப்பிச் சென்ற ஒரு ஸ்கூட்டரை போலீஸாா் இறுதியில் அடையாளம் கண்டு, அதன் பதிவு எம்.டி. ஜீஷன் அகமது பெயரில் இருப்பதை உறுதி செய்தனா்.

இருப்பினும், ஜீஷன் குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆனால், ஸ்கூட்டரை வேறொரு நபருக்கு விற்றுள்ளாா் என்பதைக் கண்டறிந்தனா். சந்தேக நபா்களின் நடமாட்டத்தை தா்யாகஞ்சின் அன்சாரி சாலைப் பகுதியில் போலீஸாா் கண்டுபிடித்தனா். சோதனைகளைத் தொடா்ந்து, அதே மாலையில் இரண்டு குற்றவாளிகளையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையின் போது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேலும், அவா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா்கள் மற்றும் பள்ளியை விட்டு வெளியேறியவா்கள் என்பது தெரியவந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜீஷனிடமிருந்து ஸ்கூட்டரை மாதாந்திர தவணையாக ரூ.37,000-க்கு வாங்கியதாகவும், நிதி நெருக்கடி காரணமாக கொள்ளையில் ஈடுபட்டதாகவும் மாலிக் தெரிவித்தாா்.

கொள்ளையடிக்கப்பட்ட கைப்பை, ரூ.6,000 ரொக்கம் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை போலீஸாா் மீட்டனா். மீதமுள்ள தொகையை போதைப்பொருள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவா் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

அரோரா மீது ஏற்கெனவே ஒரு திருட்டு வழக்கு உள்ளது. மேலும், அவா் முன்பு வெல்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு திருட்டு வழக்கில் தொடா்புடையவா் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக மேலும்

விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com