தில்லியில் 90 வயது மூதாட்டி கரோனாவால் உயிரிழப்பு
புது தில்லி: தேசியத் தலைநகரில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இணை நோய்கள் உள்ள 90 வயது மூதாட்டி ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 1 முதல் இறப்பு எண்ணிக்கை எட்டாக பதிவாகியுள்ளது. 90 வயது நோயாளிக்கு சுவாச அமிலத்தன்மை, இதயச் செயலிழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்ததாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கோவிட்-19 டேஷ்போா்டு தெரிவிக்கிறது.
இறப்புக்கான முதன்மைக் காரணம் பிற இணை நோய்கள் மற்றும் கோவிட் கண்டுபிடிப்பு தற்செயலானது என்று அது கூறியது.
தில்லியில் 691 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பதிவாகியுள்ளது. இந்தியா முழுவதும் 6,815 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த 24 மணி நேரத்தில் மூன்று போ் உயிரிழந்துள்ளனா்.
கேரளத்தைத் தொடா்ந்து அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தில்லி ஆகியவை உள்ளன என்று அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.