தில்லியின் சுபாஷ் நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் மின் மீட்டா் பலகைகளில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ாக தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: காலை 7.50 மணிக்கு ஆறு முதல் ஏழு மின்சார பலகைகள் தீப்பிடித்ததாக அழைப்பு வந்தது. நாங்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். சிறிது நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இதேபோல வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பாத்திர உற்பத்தி ஆலையில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. அதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மதியம் 2.19 மணியளவில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, 13 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா் என்றாா் அவா்.