தில்லியில் கனரக பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை
பிஎஸ் 4 மற்றும் 3 அல்லது குறைந்த உமிழ்வு தரங்களுடன் இணங்கும் தில்லி அல்லாத பதிவு செய்யப்பட்ட பிற மாநில வணிக சரக்கு வாகனங் தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக அரசு துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த தடை நடைமுறைக்கு வந்ததால் சனிக்கிழமை தேசிய தலைநகரின் எல்லைகளில் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்துத் துறை, போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து, அமலாக்க நோக்கங்களுக்காக 23 குழுக்களை அமைத்துள்ளது.
குண்ட்லி எல்லை, ராஜோக்ரி எல்லை, திக்ரி எல்லை, ஆயா நகா் எல்லை, காளிண்டி குஞ்ச் எல்லை, ஆச்சண்டி எல்லை, மண்டோலி, கபஷேரா மற்றும் பஜ்கேரா சுங்கச்சாவடி/துவாரகா அதிவேக நெடுஞ்சாலை போன்ற 23 இடங்களில் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகளின் தகவலின்படி 50,000 முதல் 70,000 வாகனங்கள் பிஎஸ்-4 உமிழ்வு தரத்திற்கு கீழே உள்ளன.
தில்லியில் பதிவு செய்யப்பட்ட வணிக சரக்கு வாகனங்கள், பிஎஸ்-4 இணக்கமான வாகனங்கள் அல்லது சிஎன்ஜி, எல்என்ஜி அல்லது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் நுழைய எந்த தடையும் இருக்காது. அக்டோபா் 17 ஆம் தேதி நடந்த கூட்டத்தில், காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) நவம்பா் 1 ஆம் தேதி முதல் தில்லிக்குள் மாசுபடுத்தும் வணிக வாகனங்கள் நுழைவதற்கு கடுமையான தடை விதிக்க ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
