Enable Javscript for better performance
புதுச்சேரி அப்பா பைத்தியம் சுவாமி கோயில் குடமுழுக்கு: குருவுக்காக முதல்வர் கட்டிய கோயில்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி அப்பா பைத்தியம் சுவாமி கோயில் குடமுழுக்கு: குருவுக்காக முதல்வர் கட்டிய கோயில்

    By dn  |   Published on : 16th April 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pdyappa

    புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியின் ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிக்கு புதுச்சேரியில் கோயில் கட்டி திங்கள்கிழமை குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள வீமகவுண்டன்பாளையத்தில் அப்பா பைத்தியம் சுவாமிக்கு கோயில் கட்டியுள்ளார் முதல்வர் ரங்கசாமி. இதன் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த 12-ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    இதையொட்டி, திங்கள்கிழமை காலையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.  மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் குடமுழுக்கை நடத்தி வைத்தார். விழாவில் பங்கேற்ற முதல்வர் என்.ரங்கசாமி, கலசத்தின் மீது புனித தீர்த்தத்தை ஊற்றினார்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், கட்சியினர் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    முதல்வரின் ஆன்மிக குரு: 

    சேலத்தில் உள்ள சித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலுக்கு முதல்வர் ரங்கசாமி அடிக்கடி சென்று வருவது வழக்கம். அவரைத் தனது ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார் முதல்வர் ரங்கசாமி.

    எனவே நீண்ட தொலைவில் இருக்கும் சேலத்துக்கு அடிக்கடி சென்று வர வேண்டிய நிலையில், அவருக்கு புதுச்சேரியில் கோயில் கட்ட முடிவெடுத்த முதல்வர் ரங்கசாமி, அப்பா பைத்தியம் சுவாமிகளின் அனுமதியோடு இக்கோயில் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai