சுடச்சுட

    
    lordsivasakthi

    காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் முருகன் கோயில்களில் புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோயில், கச்சப்பேஸ்வரர் கோயில், பனாமுடீஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், முத்தீஸ்வரர் கோயில் உள்பட அனைத்து சிவாலயங்கள், குமரக்கோட்டம் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அனைத்து கோயில்களிலும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் 4 ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இரவில் அனைத்து சிவாலங்களிலும் நடராஜர் சுவாமிக்கு சாதம் வடித்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது. சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai