சுடச்சுட

  

  மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

  By dn  |   Published on : 19th March 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  C18MAR14

  மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம், வேத மந்திரங்கள் முழங்க, அரோகரா கோஷத்துடன் வெகு விமரிசையாக திங்கள்கிழமை நடந்தது.

  முருகனின் ஏழாவது படை வீடாக போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 7 நிலை ராஜகோபுரம் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

  இதற்கான கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், கடந்த வியாழக்கிழமை தொடங்கின. யாக சாலைப் பூஜைகளுக்காக, மொத்தம் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகளும், சனிக்கிழமை 2 மற்றும் 3ஆம் கால யாகசாலை பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை 4 மற்றும் 5ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன. ஞாயிற்றுக்கிழமை இரவு கடவுள் சிலைகளுக்கு அஷ்டபந்தனம் மற்றும் சொர்ணபந்தனம் சாற்றப்பட்டது.

  திங்கள்கிழமை அதிகாலையில் 6ஆம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதன்பின் காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்துக் கோபுரங்களுக்கும் வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

  கும்பாபிஷேகம் முடிந்தபின் தீர்த்தக் கலசங்களில் இருந்த புனித நீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai