Enable Javscript for better performance
ஆண்டாள் சூடிக் களைந்த பரிவட்டம் அனுப்பும் விழா- Dinamani

சுடச்சுட

    
    andal_flower

    ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் சனிக்கிழமை நடைபெறும் தேரோட்டத்தில் பெருமாள் சூடுவதற்காக ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த வஸ்திரம், கிளி அனுப்பும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

    ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் 10-ஆம் திருநாளான சனிக்கிழமை நடைபெறும் தேரோட்டத்தில், பெருமாள், ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த வஸ்திரம், கிளியுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஸ்ரீஆண்டாளுக்கு வியாழக்கிழமை சிறப்புப் பரிவட்டம், கிளி சூட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் இவற்றை களைந்து கூடையில் ஏந்தியவாறு கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரங்கராஜன், சுதர்ஸன் பட்டர் உள்ளிட்டோர் மாட வீதிகளின் வழியே ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். பின்னர் இவை ஸ்ரீரங்கம் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai