Enable Javscript for better performance
கிருஷ்ணா ஆற்றில் புஷ்கர மேளா: ஜயேந்திரர், விஜயேந்திரர், ஆந்திர முதல்வர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணா ஆற்றில் புஷ்கர மேளா: ஜயேந்திரர், விஜயேந்திரர், ஆந்திர முதல்வர் பங்கேற்பு

    By மதி  |   Published on : 13th August 2016 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chandrababu

    கிருஷ்ணா ஆற்றில் நடைபெற்ற புஷ்கர மேளாவில் காஞ்சி சங்கராச்சாரியார்களிடம் ஆசி பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர்.

    ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா ஆற்றில் புஷ்கர மேளா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் ஜயேந்திரர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    விழாவையொட்டி, விஜயவாடாவில் உள்ள துர்கா காட் அருகில் காஞ்சி மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி தொடங்கி வைத்தனர்.

    அதன் பின் திருமலை தேவஸ்தானம் சார்பில் திருமலையிலிருந்து கொண்டு சென்ற மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை, மலர்கள், பழங்கள் உள்ளிட்ட ஏழுமலையானின் சீர்வரிசைகளைக் கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி யினர் கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த புஷ்கரத்தில் சுமார் 5 கோடி பேர் புனித நீராடுவர் என ஆந்திர அரசு கணக்கிட்டுள்ளது. நீராடும் மக்களைக் கண்காணிக்க கிருஷ்ணா ஆற்றங்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மக்களின் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai