சுடச்சுட

  

  தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரிக்கு தென்கரையில் 10-வது திருத்தலமாகத் திகழ்வது திருவாலம்பொழில் அருள்மிகு ஞானம்பிகை உடனுறை அருள்மிகு ஆத்மநாதேஸ்வர ஸ்வாமி (வடமூலேஸ்வரர்) ஆலயம். தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து தென் மேற்கே 5 கி.மீ தூரத்தில் குடமுருட்டியாற்றின் கரையில் உள்ளது. ஒரு காலத்தில் ஆலமரங்கள் சூழ்ந்த காட்டில் இறைவன்

  அருள்பாலித்ததால் வடாரண்யேஸ்வரர் என்று இறைவனுக்குத் திருநாமம். வழிபடுவோருக்கு ஞானத்தை வழங்கி கல்வி கேள்விகளில் சிறந்திட வைக்கும். அம்பிகை என்பதால் ஸ்ரீ ஞானாம்பிகை என்று அம்மனுக்கு பெயர். சூரியன், அஷ்ட வசுக்கள் பூஜித்து பேறு பெற்ற தலம். திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதும், சுந்தர மூர்த்தி சுவாமிகளால் வழிபாடு செய்யப்பட்டதுமான இத்தலம் மக நட்சத்திரக்காரர்களுக்கான விசேஷ பரிகாரத்தலமாகும்.

  இத்திருக்கோயிலில் திருப்பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஜூன் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறுகின்றது. இவ்வைபவத்தில் பல்வேறு மடாதிபதிகள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். யாகசாலை பூஜைகள் வெள்ளியன்று துவங்கியது.

  -எஸ்.வெங்கட்ராமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai