Enable Javscript for better performance
இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்கள்? 

  Published on : 09th February 2018 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astrolo1


  தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (பிப்ரவரி 9 - பிப்ரவரி 15) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன்பெறுங்கள். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  கவலைகள் நீங்கும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்களின் தேவைகள் நிறைவேறும். தடையை கடந்து உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் மதிப்பு மரியாதைக்கு குறைவு வராது. தொழிலில் பிரகாசமான வாய்ப்புகளைக் காண்பீர்கள். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைப் பதற்றப்படாமல் செய்யவும். சக ஊழியர்கள் பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு புதிய மாற்றங்கள் தென்படும். மேலும் பழைய கடன்களும் வசூலாகும். 

  அரசியல்வாதிகள் தொண்டர்கள் மற்றும் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். சிலருக்கு கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செலவு செய்யும் நேரத்தில் கவனத்துடன் இருக்கவும். பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். மாணவ

  மணிகள் வருங்காலத்திற்காகச் செய்யும் கல்வி சம்பந்தமான பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். 

  பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 11,12. 

  சந்திராஷ்டமம்: 9,10.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உற்றார் உறவினர்களின் அலட்சியப்போக்கை பெரிது படுத்த வேண்டாம். மற்றபடி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தோர் வகையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும்.  

  உத்தியோகஸ்தர்களுக்கு கடின உழைப்பிற்கு இடையே எதிர்பாராத நிம்மதி பிறக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்ட வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் நன்றாகவே இருக்கும். விவசாய உழைப்பாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். 

  அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவார்கள். கட்சித் தலைமையிடம் நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரின் திட்டங்கள் நிறைவேறும். தொடர்ந்த உழைப்புக்கு நடுவில் ஓய்வெடுத்துக்கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. பெண்மணிகள் குடும்பத்தில் குழப்பங்கள் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் கடுமையான உழைப்பிற்குப்பிறகே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

  பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 9,10. 

  சந்திராஷ்டமம்: 11,12.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  செயல்களில் முன்னேற்றங்கள் ஏற்படும். தொடர்ந்து வந்த பிரச்னைகள் அகலும். எதிரிகள் சற்று விலகியே இருப்பார்கள்.  வெளியிலிருந்து வரக்கூடியவை இனிய செய்திகளாகவே அமையும். சேமிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உடன்பிறந்தோரிடமிருந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.  

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். அலுவலகம் தொடர்பான பணிகளுக்காக வெளியூர் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு உற்பத்தி செய்வதன் மூலம் மேலும் லாபத்தைப் பெறுவீர்கள். 

  அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு ஆளாவீர்கள். தொண்டர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுத்து சேவை செய்யுங்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். பணவரவு சரளமாகவே காணப்படும். பெண்மணிகளைத் தேடி மகிழ்ச்சியான செய்திகள் வரும். மாணவமணிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 9,11. 

  சந்திராஷ்டமம்: 13,14,15.

  {pagination-pagination}

  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் வசூலாகும். வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் நல்ல முறையிலேயே நடைபெறும். வெளியில் கொடுத்திருந்த பணத்தை நல்லபடியாக வசூல் செய்வீர்கள். விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்பதால் இப்போதே நல்ல விலைக்கு விற்கு லாபம் பெறுவது நல்லது.

  அரசியல்வாதிகள் எதிலும் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். அரசியல் சேவையில் புதிய முயற்சி செய்வதைத் தவிர்க்கவும்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ஆனாலும் வருமானம் குறைவாகவே இருக்கும். பெண்மணிகள் குழந்தைகளுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் கவனத்தைச் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.  

  பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தரிசிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 10,12. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  பொருளாதாரம் சொல்லிக்கொள்ளும்படியாகவே இருக்கும். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். உங்களின் செயல்களைச் சரியாக செய்து முடித்து நல்ல பெயரெடுப்பீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள்.  

  உத்தியோகஸ்தர்கள் நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு உழைப்புக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சில மாற்றங்களைச் செய்வீர்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்யும் பணியாளர்களை ஆதரித்து நடந்து கொள்ளவும்.

  அரசியல்வாதிகள் கட்சியில் ஆர்வமுடன் பணியாற்றுவீர்கள். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வளர்ச்சியைக் காண்பீர்கள். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை கூடும். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். 

  பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 11,12. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். பெரியோர்களின் ஆசிகளைத் தேடிப் பெறுவீர்கள். மற்றபடி நண்பர்களிடமும் கூட்டாளிகளிடமும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சலுகைகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக இருக்கும். அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன்களுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்வீர்கள்.

  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். புதிய திட்டங்களைத் திட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் பெருகும். ரசிகர்களின் அன்பும் ஆதரவும் அமோகமாக இருக்கும். பெண்மணிகள் கணவரிடம் அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள். 

  மாணவமணிகள் ஆசிரியரிடமும் நண்பர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டி வரும். 

  பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13,14.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  சோதனைகள் மறையும் அலைச்சல்கள் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் பொருளாதார நிலைமை சுமாராவே இருக்கும். எனவே எவருக்கும் கடன் தர வேண்டாம். 

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிறப்புகளைக் காண்பீர்கள். கூட்டாளிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். கழனிகளை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

  அரசியல்வாதிகள் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவீர்கள். இதனால் உங்களின் புகழும் செல்வாக்கும் உயரும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களே நல்ல வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். பெண்மணிகள் எதையும் பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். 

  மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் சொற்படி நடப்பது நன்மையை தரும்.

  பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 12,14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். ஆன்மிக சிந்தனைகளால் சிறப்படைவார்கள். சிறு விரயங்கள் உண்டாகும் காலகட்டமாக இருப்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை.

  உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிக்கவும். மற்றபடி ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வெளியூர்களிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். வருமானத்திற்கு ஏற்ற பல வழிகளைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாகவே இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். புதிய குத்தகைகளை தற்சமயம் எடுக்க வேண்டாம்.  

  அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களை அனுசரித்து சேவையாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு தடைப்பட்டு வந்த செயல்கள் வெற்றியுடன் முடியும். சக கலைஞகர்களின் உதவி கிடைக்கும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.  மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: தினமும் 108 முறை "ராம் ராம்" என்று எழுதி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13,15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  செலவுகள் அதிகரிக்கும். வழக்குககள் சாதகமாக அமையாது. ஆனாலும் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். எவருக்கும் முன்ஜாமீன் போட வேண்டாம். 

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேரும். சக ஊழியர்கள் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டாளிகளின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். சொத்துத் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. 

  அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு குறையும். அரசியல் சேவைகளில் தாமாக முன்வந்து எந்த விஷயங்களையும் செய்ய வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்கள் உதவுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். 

  மாணவமணிகள் சுறுசுறுப்புடன் பாடங்களில் கவனத்தைச் செலுத்திப் படிக்கவும். 

  பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 14,15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்கவேண்டிய வாரம்.  உங்கள் பெயர் புகழுக்கு களங்கும் ஏதும் ஏற்படாது. உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட இது உகந்த காலம் அல்ல. குடும்பத்தில் அமைதி நிலவும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நல்லபெயர் வாங்குவீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியமும் கிடைக்கும். வியாபாரிகள் நண்பர்களிடம் மனக்கசப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு வருமானம் பலவகையிலும் பெருகும். கால்நடைகளால் பால் வளம் பெருகும். புதிய குத்தகைகளையும் பெறுவீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் நாட்டம் குறையும். தொண்டர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும். பணவரவும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.. படிப்பில் சிரத்தையுடன் படித்தால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

  பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 9,15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும்.  நல்லவர்களின் நட்பால் புதிய பலம் பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். நெடுநாளைய உடல் உபாதையிலிருந்து விடுபடுவீர்கள்.  

  உத்தியோகஸ்தர்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இருப்பினும் கவனமாக வேலைகளைச் செய்யவும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறக்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். புதிய வகை தானியங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். . பெண்மணிகளுக்கு குடும்பத்தின் அந்தஸ்து உயரும். ஆடை ஆணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள் . மாணவமணிகள் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள். கல்வி மற்றும் விளையாட்டில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். 

  பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 10,15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். வருமானம் சீராக இருக்கும். உங்களின் மதிப்பு மரியாதை உயரும். ஆனாலும் உறவினர்களால் தொல்லைகள் ஏற்படலாம். சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும். 

  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். அதேசமயம் கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் இல்லையென்றால் நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும்.  விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. எனவே, புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். 

  அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். சிலருக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கும். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.  பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

  மாணவமணிகள் படிப்பில் கடின உழைப்பை மேற்கொண்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: " ஜெய ஜெய துர்க்கா' என்று ஜெபித்தபடி துர்க்கையை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 11,15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai