இன்று சிவ பக்தர்கள் மனதில் தியானிக்க வேண்டிய ஸ்லோகம்...

சிவராத்திரியும், பிரதோஷமும் சேர்ந்த தினமான இன்று சிவ பக்தர்கள் நொடிப் பொழுதும் தவறாது சிவ சிந்தனையுடன் இருங்கள்.
இன்று சிவ பக்தர்கள் மனதில் தியானிக்க வேண்டிய ஸ்லோகம்...

சிவராத்திரியும், பிரதோஷமும் சேர்ந்த தினமான இன்று சிவ பக்தர்கள் நொடிப் பொழுதும் தவறாது சிவ சிந்தனையுடன் இருங்கள். மாலை 6 மணிக்குள் கோயிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து சிவ சிந்தனை செய்தாலே போதுமானது.

மனதில் சொல்ல வேண்டியவை....

|| சிவாய நம ஓம் ||

|| சிவாய வசி ஓம் ||

|| சிவ சிவ சிவ ஓம் ||

இப்படிச் செய்வது ஒரு விதம், மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது ஒரு விதம். சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம். முடிந்தால் இவைகளை கோயிலுக்கு உபயமாக வழங்கலாம். 

இரவு கண்விழித்திருக்கும் போது சொல்ல வேண்டியவை....

இறைவனை இதயத்தில் பதித்து, இரவில் சிவச்சிந்தனையுடன் கண்விழித்திருந்து, நான்கு கால வழிபாடுகள் செய்ய வேண்டும். இரவு கண்விழித்திருக்கும் போது இந்தத் திருநாமங்களை மனதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

|| ஸ்ரீ பவாய நம ||

|| ஸ்ரீ சர்வாய நம ||

|| ஸ்ரீ பசுபதயே நம ||

|| ஸ்ரீ ருத்ராய நம ||

|| ஸ்ரீ உக்ராய நம ||

|| ஸ்ரீ மகாதேவாய நம ||

|| ஸ்ரீ பீமாய நம ||

|| ஸ்ரீ ஈசாநாய நம ||

இதைத்தவிர சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com