கே.சி.எஸ் ஐயர் கணித்த இந்த வார பலன்கள் (மார்ச் 23 - 29)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வாரப் பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
கே.சி.எஸ் ஐயர் கணித்த இந்த வார பலன்கள் (மார்ச் 23 - 29)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல்ஆரோக்கியம் பலப்படும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் அனுசரணையோடு இருப்பார்கள். ஆன்மிகவாதிகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். பணவருவாய் நன்றாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் சற்று குறைவாகவே இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் வசூலாகும். பயிர் விளைச்சலில் எந்த பாதிப்பும் இருக்காது.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பணவரவு நன்றாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். 

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு சிறப்படையுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 23, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் முயற்சிகள் நிறைவேறுவதில் சில தடைகள் ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். எச்சரிக்கையுடன் இருந்தால் அனைத்தையும் சமாளித்து விடலாம். மற்றபடி பொருளாதாரம் அபிவிருத்தி அடையும்.

உத்தியோகஸ்தர்கள் எல்லோரிடமும் சுமுகமாகப் பழகவும். பணவரவு நன்றாக இருப்பதால் உழைப்பு வீண் போகாது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக முடியும். அதிக போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய குத்தகைகளை எடுக்கலாம். 

அரசியல்வாதிகளின் புகழ் வளரும். புதிய பதவிகள் தேடி வரும். பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் தேடிவரும். பெண்மணிகள் சேமிப்பை எடுத்துச் செலவு செய்ய நேரிடும். அதோடு கணவருடனான ஒற்றுமையும் சுமாராகவே இருக்கும். உடல் நலத்திலும் கவனமாக இருக்கவும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். படிப்பில் அக்கறை செலுத்தவும். 

பரிகாரம்: "ராம ராம' என்று ஜெபித்துக்கொண்டே அனுமனை சுற்றி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் முயற்சிகள் நிறைவேறுவதில் சில தடைகள் ஏற்படும். உடல்நலனில் அக்கறை செலுத்தவும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிக முயற்சியை மேற்கொள்ள வேண்டி வரும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் வழிகாட்டுதலால் உங்கள் செயல்களை நல்ல முறையில் முடித்து விடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் இழுபறியாகவே அமையும். அதனால் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். அதோடு நண்பர்களிடமும் மனக்கசப்பு உண்டாகலாம். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் பெறலாம். 

அரசியல்வாதிகள் அனைத்துச் செயல்களிலும் வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும்.

பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு இது சாதகமான வாரம். புதிய முயற்சிகளில் வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டுவர, சங்கடங்கள் குறையும். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். வருமானம் உயரத் தொடங்கும். பிள்ளைகளை வெளியூர் மற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேற்றுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். வியாபாரிகள் நல்ல வருமானம் ஈட்டி முக்கிய பிரச்னைகளை சமாளிப்பீர்கள். தொழிலில் சிறு முதலீடுகளைச் செயய்லாம். விவசாயிகளுக்குக் கொள்முதலில் பற்று வரவு சீராக இருக்கும். கால்நடைகளால் லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்காதீர்கள். கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் சம்பாதிக்க முயற்சி செய்யவும். கலைத்துறையினர் இடையூறுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கிஅமைதி நிலவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 26.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படம். ஆனந்தமான வாரம். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் திறமைகள் வீண் போகாது. பூர்வீகச் சொத்து வழியில் இருந்த பிரச்னைகள் விலகி சுமுகமான பாகப் பிரிவினைகள் ஏற்படும். மேலும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். கொடுத்த வேலைகளை செவ்வனே செய்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். மறைமுகப் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிக்கவும். விவசாயிகளுக்கு மகசூலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகளை எடுக்க முயற்சிக்கவும். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். பெற்றோரைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும். 

பரிகாரம்: பைரவரை வணங்கிவர சிறப்புகள் உண்டாகும்.

அனுகூலமான தினங்கள்: 23, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் திட்டங்கள் அனைத்தையும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். இனிய செய்திகள் உங்களை வந்தடையும். பெரியோர்களின் நட்பும் ஆசியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்குப் புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பெரும் சாதனைகளை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். கடமைகளைச் செய்வதில் சலிப்பு ஏற்படவே செய்யும். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வருங்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரம் போடுவதற்கான சூழ்நிலை உருவாகும். 

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதார நிலைமை நன்றாகவே காணப்படும். அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். விடாமுயற்சிகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும். உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். 

உத்தியோகஸ்தர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்திற்கு அஸ்திவாரம் போடுவீர்கள். 

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல முறையில் நடந்துகொண்டு பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். 

பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். மாணவமணிகளுக்கு கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டுகளிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபக்த அனுமனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 28. 

சந்திராஷ்டமம்: 23. 

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். வெற்றிகரமான வாரம். ஆச்சரியமான செய்திகளைக் கேட்பீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வருமானத்தில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் தேவைக்கேற்ப உதவுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பியிற்சிகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் திருப்திகரமாக முடியும். வியாபாரிகள் பொருள்களைப் புதிய சந்தைகளில் விற்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சலால் லாபம் அதிகரிக்கும். புதிய குத்தகைகள் தேடி வரும். கால்நடைகளை வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். எதிரிகள் உங்களிடம் அடங்கிப்போவார்கள். கலைத்துறையினருக்கு காரியங்கள் வெற்றி உண்டாகும். புதிய ஒப்பந்தங்களால் பண வரவைப் பெறுவீர்கள். பெண்மணிகள் இல்லத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் எண்ணம் மேலோங்கும். 

மாணவமணிகளுக்கு உஷ்ணம் காரணமாக சரும பாதிப்புகள் உண்டாகலாம். 

பரிகாரம்: விநாயகரை திங்களன்று வழிபட்டு நலன் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 23, 27. 

சந்திராஷ்டமம்: 24, 25.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். தெளிவுகள் பிறக்கும். உங்கள் செயல்களை சரியாகத் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆசியுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தும்போது உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பைத் தேடிப் பெறவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவுடன் சில அரிய சாதனைகளைச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சுமுகமான நிலைமை 
தென்படும். அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகள் நல்ல மகசூலை அள்ளுவீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடந்துவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் சற்று தள்ளியே இருக்கவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் வெற்றி பெற முயற்சி செய்யவும். பெண்மணிகளுக்கு பொருளாதார நிலைமை சீராக இருக்கும். கணவரிடம் அன்பு பாசத்தைப் பெறுவீர்கள். மாணவமணிகள் விடியற்காலையில் எழுந்து பாடங்களைப் படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்க முயற்சி செய்யவும். 

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 28. 

சந்திராஷ்டமம்: 26, 27.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். செய்தொழிலை மேம்படுத்த நண்பர்கள் உதவுவார்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப் படுத்துவீர்கள். தூரப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேலதிகாரிகள் அனுசரித்து நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு எல்லாத் தடைகளும் நீங்கும். லாபம் பெருகும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் பால் வியாபாரத்திலும் நல்ல பலன் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் கோரிக்கைகளை தலைமையிடம் கூறிவிட்டு அமைதி காக்கவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்மணிகள் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டவும். மாணவமணிகள் விடாமுயற்சியால் வெற்றியடைவீர்கள். பெற்றோரை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 27.

சந்திராஷ்டமம்: 28, 29.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களுக்காக வாக்கு கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். வெளியில் கொடுத்திருந்த கடன் இந்த வாரம் வசூலாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு இது முன்னேற்றமான வாரம். சிறிய முயற்சிகளிலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணங்களுக்கு பாத்திரமாக பொருள்களின் தரத்தை உயர்த்தவும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டுப் பலன் பெறலாம். வாய்க்கால் வரப்பு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களிடம் கவனமாக நடந்துகொள்ளவும். 

அரசியல்வாதிகள் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு தங்கள் எண்ணங்களைச் செயல்படுத்தவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் சில சிரமங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் திறந்த மனதுடன் பழகினால் புகழ் பெறலாம். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் தேவையான ஆதரவைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்

வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 25, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். ஆலயத் திருப்பணிகளிலும் தர்ம காரியங்களிலும் பங்கேற்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில் நிலவிய பிரச்னைகள் மறையும். தேடி வரும் வாய்ப்புகளையும் சாதுர்யமாகப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த பலன்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்யாதீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்கு செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் நல்லவிதமாகப் பழகி அவர்களின் உதவிகளைப் பெறவும். கலைத்துறையினர் வசீகரமான பேச்சினால் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்மணிகள் ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். குழந்தைகளாலும் பெருமை அடைவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டும் கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com