Enable Javscript for better performance
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு!- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு!

    Published on : 02nd December 2019 03:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thanjavur_sivasakthi_temple

     


    தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடைபெற்றது. 

    உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

    இதையடுத்து கடந்த 29-ம் தேதி விக்னேஷ்வர பூஜையைத் தொடர்ந்து, கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை தொடங்கியது. அதைத் தொடர்ந்து 30-ம் தேதி மூலமந்திர ஹோமம் மற்றும் ருத்ராபிஷேகம் நடைபெற்றது. டிச.1-ம் தேதி காலை 2-ம் கால யாகசாலையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலையும், நடைபெற்றது. 

    டிச.2-ம் தேதியான இன்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9.00 மணிக்கு மேல் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருவுடையார் சன்னதியில் செப்பு திருமேனியாலான சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai