இந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்?

இந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வாரம் (டிசம்பர் 06 முதல் டிசம்பர் 12 வரை)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வாரம் (டிசம்பர் 06 முதல் டிசம்பர் 12 வரை) உள்ள ராசி பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தவும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ஆன்மிகவாதிகளுக்கு எந்தப் பிரச்னைகளும் இராது. கழுத்தில் வலி போன்ற சில உடல் உபாதைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களும் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் புதிய மாற்றம் தென்படும். வருமானத்திற்குப் பல வழிகளைக் காண்பீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். கடுமையாக உழைத்து எதிர்பாராத லாபத்தை அள்ளுவார்கள்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக் கட்சியினரும் மனம் விட்டுப் பேச வேண்டாம். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் பலிக்கும். தொடர் வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுக்கவும். பெண்மணிகள் வீட்டில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். பொருள் வரவும் சிறப்பாக இருக்கும். குடும்ப கெளரவம் உயரும். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய கவனம் தேவை.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

பொருளாதார நிலையில் மாற்றம் ஏதும் இராது. அநாவசியச் செலவுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தந்தையின் உடல்நிலையில் சிறிது பாதிப்புகள் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஒரு தொய்வு காணப்படும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நலம். வியாபாரிகள் சந்தையில் குறைந்த அளவில் விற்பனையாகும் பொருள்களைத் தவிர்த்துவிட்டு அதிக விற்பனை வாய்ப்புள்ள பொருள்களை வியாபாரம் செய்யலாம். விவசாயிகளுக்கு கொள்முதல் தொடரும். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள் வேலைகளைத் திட்டமிட்டு செய்யவும். ரகசியங்களை கவனமுடன் பாதுகாக்கவும். கலைத்துறையினர் சிரமங்களுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு உற்றார் உறவினர்கள் உதவி செய்ய முன்வருவார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புண்டு. 

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். படிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

ஆன்மிக சிந்தனைகளால் மனம் உற்சாகமடையும். தொழிலில் இருந்த சிக்கல்கள் படிப்படியாக விலகத் தொடங்கும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏற்படும் பயங்களும் கவலைகளும் வேலைகளில் இடையூறுகள் ஏற்படுத்தும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவார்கள். அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாகவே முடியும். விவசாயிகளுக்கு தோட்டம் , தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. உற்சாகமின்மை, மேலிடத்தின் அவமதிப்பு ஆகியவற்றைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் எதிர்பார்த்த பாராட்டுகளைப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.

பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். ஆடம்பரப் பொருள்களையும் வாங்குவீர்கள். மாணவமணிகள் கல்வியில் மேன்மை அடைவீர்கள். பெற்றோர், ஆசிரியர் சொற்படி நடக்கவும்.

பரிகாரம்: ராம பக்த ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

சுபச்செலவுகள் ஏற்படும் என்பதால் சேமிப்புக்கு இடம் இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்றம், இறக்கமாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். உடன்பிறந்தோரை அனுசரிக்கவும். வெளியூர் பயணங்களால் அனுகூலமிராது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம், உத்தியோக மாற்றம் சற்று இழுப்பறியுடன் சாத்தியமாகும். பணிகளில் சற்று தொய்வான நிலையை காண்பார்கள். 
வியாபாரிகளுக்கு கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முயற்சிகளில் ஈடுபடவும். கொடுக்கல் வாங்கல்கள் சராசரியாக இருக்கும். 

விவசாயிகள் கடினமாக உழைக்க நேரிடும். செலவுகளை கட்டுப்படுத்தவும். பண்டமாற்று முறைகளினால் சற்று வருமானம் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு சிலர் களங்கம் கற்பிக்க முற்படுவார்கள். சாதுர்யத்தால் சமாளித்து விடுவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே சில ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் குடும்பத்தாருடன் கோபத்தைத் தவிர்க்கவும். 

மாணவமணிகள் விளையாட்டில் வெற்றி பெறுவார்கள். படிப்பில் சிரத்தை எடுத்து படிக்கவும்.

பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உறுதியான எண்ணங்களுடன் வெற்றிவாகைச் சூடுவீர்கள். குடும்பச் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். வேலைகள் துரிதமாக முடியும். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சில குழப்பங்களும் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகத்தில் மதிப்பு உயரும். அனைத்து வேலைகளையும் துரிதமாக முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சிறிது மந்த நிலைமை ஏற்படலாம். கூட்டாளிகளுடனும் மனக்கசப்புகள் வரலாம். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். புதிய உபகரணங்களையும் கால்நடைகளையும் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் அனைத்துக் காரிங்களிலும் வெற்றி வாகை சூடுவர். சிரமமின்றி புதிய பணிகளில் அமர்வர். தொண்டர்களின் ஆதரவு இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தலாம். பெற்றோரின் ஆதரவு குறையும்.

பரிகாரம்: திருவேங்கடநாதனை தரிசனம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: 6, 7.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

பொருளாதாரம் சீர்படும். எடுத்த காரியங்கள் சற்று சிரமங்களுக்கிடையே முடிவுறும். மதிப்பு மரியாதைக்கு பங்கம் வராது. சில நேரங்களில் அலைச்சலும் குழப்பங்களும் தொழிலில் உண்டாகும். உழைப்பு அதிகமாகத்தான் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகள் மிகவும் அதிகமாகவே இருக்கும். பலவித இன்னல்களுக்கிடையில் வேலைகளைத் துரிதமாக முடித்துவிடுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் வளர்ச்சியடையும். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக அமையும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாகும். நீர்வரத்து அதிகரிப்பதால் மாற்றுப் பயிர்களையும் ஊடுபயிர்களையும் பயிர் செய்யவும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய பதவிகளில் அமர்ந்து தனி வழியில் செல்லுவீர்கள். விலகிச் சென்ற தொண்டர்கள் விரும்பி வருவார்கள். 

கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். கணவரிடம் பற்றும் பாசமும் உண்டாகும். மாணவமணிகள் பெற்றோரின் உதவியுடன் காரியங்களைச் செய்வீர்கள். உடற்பயிற்சிகள் மன, உடல் வலிமையை கூட்டும்.

பரிகாரம்: சனீஸ்வரபகவானுக்கு தீபமேற்றி வரவும். குலதெய்வ வழிபாட்டை கூட்டிக் கொள்ளுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 6, 10. 

சந்திராஷ்டமம்: 8, 9.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். பெரும்பாலான, பிரச்னைகளில் தெளிவுகள் ஏற்படும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வர். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்காதீர்கள். வியாபாரிகள் சிலருக்குப் பழைய பொருள்களை வாங்கி விற்பதில் லாபம் பெருகும். விவசாயிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படும். செலவில்லா மாற்றுப்பயிர்களை பயிரிட்டு வருமானத்தை வளமாக்கவும்.

அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறாது. நீங்கள் மற்றவர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். எதிர்க்கட்சியினர் தொல்லை ஓய்ந்து விடும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் வருவது குறைந்தே காணப்படும். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் பேராதரவைப் பெறுவார்கள். 

பெண்மணிகள் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம். குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்து பாடங்களைப் படித்து பலன் பெறுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று செந்திலாண்டவரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: 10, 11, 12.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

சந்தோஷமளிக்கும் செய்திகள் தேடி வரும். வரவுக்கு ஏற்ற செலவுகள் செய்ய நேரிடலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டும். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சற்று மந்தமாகத்தான் ஈடுபடுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்க உள்ளது. வியாபாரிகளுக்கு நண்பர்களின் உதவியால் உங்கள் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். கொடுக்கல் வாங்கல்களில் லாபங்கள் கிடைக்கும். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் மிகுந்த லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் சிறிது வெற்றிப் பாதையை நோக்கியே செல்லும். தொண்டர்களின் ஆதரவு மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிட்டும். மாணவமணிகள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் வெற்றிப் பாதையை காட்டும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

பணவரவு இருக்கும். தொழிலில் முட்டுக்கட்டைகள் கொஞ்சம் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனதில் தெளிவுகள் பிறக்கும். சிலருக்கு வீடு , வாகன யோகம் உண்டாகும். உடன்பிறந்தோருடன் கருத்து வேற்றுமை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாயிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் அவர்களின் பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் சில சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. கொடுக்கல் வாங்கல்களில் சீரான உயர்வைக் காண்பீர்கள். விவசாயிகள் அதிக வருமானத்தைக் காண்பார்கள். புதிய குத்தகைகளும் வந்து சேரும்.

அரசியல்வாதிகள் வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் நன்கு யோசித்துச் செயல்படுங்கள். பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது வளர்ச்சி தரும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்திருக்கும். வருமானமும் சுமாராகவே இருக்கும்.

பெண்மணிகளுக்கு பெரியோரின் ஆசிகள் தேடி வரும். வெளியில் போகும் போது கவனம் தேவை. ஆடைகள் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்கும் எண்ணம் மேலோங்கும்.

பரிகாரம்: ராம பக்த ஆஞ்சநேயரை ‘ஸ்ரீ ராம ஜெயம்’ சொல்லி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

வரவு திருப்திகரமாகவே இருக்கும். உடல்நலம் சீராக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் படிப்படியாக வெற்றிகளை அடைவீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்புச் செலவு உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் இந்த வில்லங்கங்கள் விலகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் நேரத்தில் கவனத்துடன் இருந்தால் நல்லது. பயணங்கள் திருப்தி கொடுக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக இருக்கும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவர். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகும். வயல் வரப்புச் சண்டைகளில் ஈடுபட வேண்டாம். விட்டுக் கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் சரியான முடிவு எடுப்பதில் தடுமாற்றத்தைக் காண்பார்கள். மூத்தோர்களின் ஆலோசனைகளைப் பெறவும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வார்கள். சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். பெண்மணிகளின் எண்ணங்கள் வெற்றியைத் தேடித் தரும். திறந்த மனதுடன் பழகி செயலாற்றினால் புகழ் பெறலாம். மாணவமணிகள் கல்வியில் ஆர்வத்தைக் கூட்டவும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகமும் சிறப்பாக இருக்கும். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் பெறுவீர்கள். உடன்பிறந்தோரிடம் அன்பு வலுப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகப் பிரிவில் மாற்றம், சிலருக்கு வெளிநாட்டில் வேலை போன்றவை கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபத்தைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவார்கள். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாகப் பழகவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவர். புதிய ஒப்பந்தங்களும் செய்வர். பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவரிடம் மிகுந்த அன்பு கூடும். மாணவமணிகள் நிறைய மதிப்பெண்களை அள்ளுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும்.

பரிகாரம்: திட்டை ராஜகுருவையும் ஆலங்குடி குருபகவானையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படும். உழைப்புக்கு ஏற்ற வருமானமும் உண்டாகும். நினைத்த காரியத்தைச் சாதித்து விடுவீர்கள். சேமிப்பும் நன்கு உயரும். செயல்களில் உற்சாகமும் ஆர்வமும் கூடும். சகோதரரால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். சிலருக்கு வேறு வேலை அமைப்பு உண்டாகும். உத்தியோகப் பிரிவில் மாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஓங்கும். புதிய முதலீடுகளை கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து செய்யவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் உண்டாகும். கால்நடைகளுக்கு பராமரிப்புச் செலவுகளும் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். முயற்சிகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

கலைத்துறையினருக்கு தம் திறமைக்கு மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.

பெண்மணிகளுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு நிலை சுமுகமாக இருக்கும். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். உடல்நலம் சற்று கவனிக்கப்படுவது நல்லது.

பரிகாரம்: அம்பாள் தரிசனமும் காக்கைக்கு அன்னமிடலும் உன்னத பலன் அளிக்கும். 

அனுகூலமான தினங்கள்: 8, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com