என் விரோதிகள்  யார் யார் என்று முன்னரே அறியமுடியுமா?

ஒவ்வொருவர் பிறந்த யோகத்தை முதலில் குறித்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு யோகத்துக்கும்
என் விரோதிகள்  யார் யார் என்று முன்னரே அறியமுடியுமா?

(ஜோதிடப் பார்வையில் - 6  ஆம் பாவம்)

ஒவ்வொருவர் பிறந்த யோகத்தை முதலில் குறித்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு யோகத்துக்கும் ஒரு யோக நட்சத்திரமும், அவயோக நட்சத்திரமும் உண்டு. யோக நட்சத்திர நாளில் செய்யும் காரியம் எந்த ஒரு தடையும் இருக்காது, நிச்சயம் வெற்றியும் பெறும். ஆனால், அவயோக நட்சத்திர நாளில் செய்யும் காரியம் தடைபடுவதோடு, தோல்வியில் முடிவடையவோ அல்லது பிரச்னையில் போய் முடிவடையும். அதே போல், யோக நட்சத்திரகாரர்களால் ஒரு ஜாதகருக்கு மிகுந்த நன்மையே அளிக்கிறது. ஆனால், அவயோக நட்சத்திரகாரர்களுடன் பழகுவதில் கவனம் நிச்சயம் தேவை. இவை என்னென்ன என்பதனை பின்வரும் அட்டவணையில் அறிந்து செயல்படுக.

சாதாரணமாக ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், 6ஆம் வீடு எதிரிகளை குறிகாட்டும். இது சத்ரு, ரோக ஸ்தானம் ஆகும். இவற்றை விரிவாக சில லக்கினங்களுக்கு நாம் காணலாம். அனைத்தையும் இந்த கட்டுரையில் கூறிவிட இயலாது. எனவே, சில லக்கினங்களுக்கு, சில கிரக இருப்பினால் ஏற்படும் சத்ருக்களை மட்டும்  காண்போம். 

மேஷ லக்கின காரர்களுக்கு வரும் சத்ருக்கள் / விரோதிகள் யாராக இருக்கும்?

இந்த லக்கின காரர்களின் 5ஆம் அதிபதி சூரியன் ஆனவர் 6ல் கன்னியில் இருந்தால், பிள்ளைகளுடன் விரோதம் ஏற்படும். சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படமாட்டார். அதனால் உறவினர் எதிரி ஆவர். தமது மனைவியும் பயந்து நடுங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அதனால், சரியான பொருத்தமின்றி திருமணம் செய்திருந்தால் இவரின் மனைவியே எதிரி ஆவார். இவர் தனது காரியங்களை சாதித்துக்கொள்வதற்காகவே எத்தகைய வழிமுறையையும் பின்பற்றுவர். வேறென்ன எதிரிகளை இவரே உருவாக்குவார். 

லக்கின அதிபரான செவ்வாய், 6ஆம் இடமான கன்னியில் இருந்தால், இது இவரின் பகை வீடு. இதனால், தன்னைத்தானே வெறுக்கும் மனோபாவம் இருக்கும். யாரையும் நம்பமாட்டார். எவருக்கும் அடங்கவும் மாட்டார். வேறென்ன, எதிரிகள் குடும்ப உறவில் இருந்து பலரும் வரிசையில் வரத்தானே செய்வர். இந்த லக்கனத்தின் 10 , 11 க்குடைய சனி பகவான் நல்லவரல்ல. அவர் 6 ஆம் இடமான கன்னியில் இருப்பவர்கள், தொழிலில் உற்சாகமின்மையும், எந்த வேலையில் இருந்தபோதும் தகாத இடத்திற்கு வந்துவிட்டதைப் போன்றே வேண்டா வெறுப்போடு தவிக்கும் ஒரு மனநிலை உண்டாகும். ஆனால், சனி 6ல் இருப்பின் கடன், நோய் , பகை நிவாரணம் அளிப்பார்.  

சிம்ம லக்கின காரர்களுக்கு வரும் சத்ருக்கள் / விரோதிகள் யாராக இருக்கும்?

இந்த லக்கின காரர்களின் லக்கின அதிபதியான  சூரியன் ஆனவர் 6ல் மகரத்தில் இருந்தால், நிச்சயம் பகை உள்ளவர், மனதில் கபடம் இருக்கும். சுபகாரிய புலியாகவும், மற்றவர் காரியங்களில் தலை இடுபவர். எனவே, இவருக்கு நிச்சயம் விரோதிகளை இவரே சம்பாதிப்பவர் ஆகிறார். இந்த லக்கின காரர்களின்  பஞ்சமாதிபதியும், அட்டமாதிபதியும் ஆன குருவானவர் 6ல் இருந்தால், இப்படிப்பட்ட ஜாதகருக்கு பிள்ளைகளே பகையாவர். இவருக்கு விரோதிகள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இவர் அவமானப் படத்தக்க நடத்தையுடையவராக இருப்பார். இங்கிதம் அறிந்து நடந்து கொள்ளத்தெரியாதவராக இருப்பார். இதிலிருந்தே நாம் இவருக்கு எதிரிகள் யார் என தெரியவரும். 3ஆம் இடத்துக்கும், 10ஆம் இடத்துக்கும் அதிபரான சுக்கிரன் இந்த லக்கினகாரர்களுக்கு 6ல் இருந்தால், சத்ரு உள்ளவர், சாது ஜனங்களை துன்புறுத்துவார். வயது முதிர்ந்த பெண்ணிடம் ஆசை கொள்வார். சண்டைக்காரர்,  அரசாங்க விரோதியாகவும் ஆவார்.

தனுசு லக்கின காரர்களுக்கு வரும் சத்ருக்கள் / விரோதிகள் யாராக இருக்கும்?

இந்த லக்கின காரர்களின், சப்தமாதிபரும், 10 ஆம் அதிபருமான புதன், 6ல் இருந்தால், அரசாங்க விரோதமான காரியங்களை செய்பவர். எதிரிகளின் கூட்டத்தினிடையே பாக்கியத்துடன் வாழ்க்கை நடத்துபவர். பகைவர்களால் தொழில் கெடும். ஏதாவது ஒரு சமயத்தில், சுகத்தையே அறியாதபடி மிகவும் கஷ்டப்பட நேரலாம். லக்கினாதிபரும், சுகஸ்தான அதிபருமான குரு 6இல் இருந்தால், சத்ரு உடையவர். கூடவே வீடு, வாகனம் போன்றவற்றின் மேல் கடன் உள்ளவர். அநேக பகைவர்கள் ஏற்படுவார்கள். மாந்த்ரீகத்தால், பீடை உருவாகும். 6 மற்றும் லாபஸ்தானமான 11ஆம் இடத்திற்கும் அதிபதியான சுக்கிரன், 6ல் இருந்தால், பகைவர்களுடன் சேர்ந்தவர். துஷ்டர்களால் விரட்டப்படுபவர். நீண்ட நோய், இளைத்த சரீரம் மற்றும் அந்நிய தேசம் சென்று வாழ்பவர்.

மீனம் லக்கின காரர்களுக்கு வரும் சத்ருக்கள் / விரோதிகள் யாராக இருக்கும்?

இந்த லக்கின காரர்களுக்கு, சூரியன் 6 ல் இருந்தால், சொந்த பந்துக்கள் பகை ஆவர். அந்நியர்கள் நட்பாவர். தனது எதிரிகளுக்கும் நல்லதை சொல்லி திருத்த முயலுபவர். தனத்துக்கும், பாக்கியத்துக்கும் அதிபரான செவ்வாய் 6ல் இருந்தால், எப்பொழுதும் எதிரிகளிடம் பகை உள்ளவர், பகைவர்களிடம் பொருள் நஷ்டம் ஏற்படும். மனநோய்களுக்கு ஆளாகலாம். லக்கினத்திற்கும் 10ஆம் இடத்திற்கும் அதிபரான குருவானவர், இந்த லக்கினகாரர்களுக்கு, 6ல் இருந்தால், ஜோதிடம் அறிந்தவர், அரசாங்க விரோதி, அதிக காமம் இருக்கும். சண்டைக்காரரும், எதிரிகளின் இடையே வசிக்க நேர்ந்தால், பாக்கியத்துடன் ஜீவிப்பவர், ஆனால் பகைவர்களால் இவரின் தொழில் கெடும்.

இது போன்று தமக்கு யார் யார் எதிரியாக வருவார்கள் என முன்னரே அறிந்து கொள்வதால், ஒன்று எதிரிகள் இல்லாமல் செய்யாலாம். இரண்டு, எதிரிகளிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும், இதனை அறிய தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அணுகி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இதற்காக அந்த ஜோதிடர்களிடம் பொறுமை காத்து அறிதல் என்பதனை உணருதலும் அவசியமாகிறது. 

சாயியைப் பணிவோம் நன்மைகள் யாவும் அடைவோம்.

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com