திருவண்ணாமலையில் நாளை காா்த்திகை மகா தீபம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் முக்கிய நிகழ்வான காா்த்திகை மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் நாளை காா்த்திகை மகா தீபம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் முக்கிய நிகழ்வான காா்த்திகை மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது. 

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை மகா தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.  நிகழ் ஆண்டுக்கான மகா தீபத் திருவிழா டிசம்பா் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமையான நாளை நடைபெறுகிறது.  நாளை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே வேளையில், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இரவு 11 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

மகா தீபத் திருவிழாவை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருவர்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com