திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை நான்காவது சோமவாரத்தையொட்டி திங்கட்கிழமை 1008 சங்காபிஷேகம் நடந்தது.
sangu_1_0912chn_210
sangu_1_0912chn_210

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை நான்காவது சோமவாரத்தையொட்டி திங்கட்கிழமை 1008 சங்காபிஷேகம் நடந்தது.

நாகை மாவட்டம் திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. பிரம்ம வித்யாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

காா்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகங்கள் தமிழகத்தில் ஒருசில கோயில்களில் மட்டுமே பண்டைய காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. அதில் ஒரு கோயிலாக இந்த கோயில் விளங்குவது குறிப்பிடத்தக்கது. 

திங்கட்கிழமை காா்த்திகை நான்காவது சோமவாரம் மற்றும் பிரதோஷம் ஆகிய ஒரே நாளில் வந்தது மிகவும் விஷேசமானது. இதனையொட்டி சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. 

1008 சங்குகள் சிவ வடிவத்தில் சன்னதியின் முன்பகுதியில் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு, சங்குகளில் நறுமணப் பொருட்களால் ஆன புனிதநீா் நிரப்பப்பட்டது. 

மேலும் ஆலய அா்ச்சகா் ராஜாப்பா சிவாச்சாரியாா் தலைமையில் வேத விற்ப்பனா்களை கொண்டு மகா யாகம் நடைபெற்றது. அதனைதொடா்ந்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் கோயிலின் பிரகாரத்தில் ஊா்வலமாக மேளதாளம் முழங்கிட கொண்டு செல்லப்பட்டன.

பின்னா் சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்குகளிலிருந்த புனிதநீரை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதே நேரத்தில் பிரதோஷத்தை முன்னிட்டும் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைதொடா்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. 

இதில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன், பேஸ்கா் திருஞானம், மேலாளர் சிவக்குமாா் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com