கார்த்திகை திருநாளை முன்னிட்டு விளக்கொளிகளால் ஜொலித்த ஈஷா

கோவையில் உள்ள ஈஷாவில் கார்த்திகை திருநாள் மிக கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.
கார்த்திகை திருநாளை முன்னிட்டு விளக்கொளிகளால் ஜொலித்த ஈஷா

கோவையில் உள்ள ஈஷாவில் கார்த்திகை திருநாள் மிக கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.

ஈஷாவில் மஹாசிவராத்திரி, குருபெளர்ணிமா, நவராத்திரி, மாட்டு பொங்கல் போன்ற பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கார்த்திகை திருநாள் இன்று மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தியானலிங்கம், லிங்கபைரவி, சூர்யகுண்டம், சந்திரகுண்டம், நந்தி உள்ளிட்ட இடங்களில் மாலையில் 1,008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த இடங்கள் விளக்கொளிகளால் ஜொலித்தன.

ஆசிரமவாசிகள், தன்னார்வலர்கள் மட்டுமின்றி ஈஷாவுக்கு வந்திருந்த பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்தனர். கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு இன்று(டிசம்பர் 11) இரவு 7.45 மணியளவில் ஆதியோகியில் திவ்ய தரிசன நிகழ்ச்சியும், இரவு 7 மணியளவில் நந்தி முன்பாக, லிங்கபைரவி ஊர்வலத்துடன் மஹா ஆரத்தியும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com