கடவுளால் படைக்கப்பட்ட வாஸ்து புருஷன்!

இந்த அண்ட சராசரத்தில் ஜனனம் எடுத்த அனைவரும் சிவபெருமானின் பிள்ளைகள். வாஸ்துவும் சிவபெருமானின் ஒரு துளியாகும்.
கடவுளால் படைக்கப்பட்ட வாஸ்து புருஷன்!

இந்த அண்ட சராசரத்தில் ஜனனம் எடுத்த அனைவரும் சிவபெருமானின் பிள்ளைகள். வாஸ்துவும் சிவபெருமானின் ஒரு துளியாகும்.  வாஸ்து என்ற கோட்பாட்டின் தலைவன் வாஸ்து புருஷன் ஆவான். வாஸ்து நாம் வாழும் இடத்தில் எப்படிச் செயல்படுகிறார் என்பதை அந்தந்த வாஸ்து புருஷன் அளவு விகிதாச்சாரத்தில் தெரிய வந்திடும். வாஸ்து என்பவர் மனித உருவம் மற்றும் ஆண் தன்மை கொண்ட தேவர்களில் ஒருவர் என்று கூறலாம்.  ஜாதகத்திற்கு அப்பாற்பட்டு  ஒவ்வொரு நிலத்திலும் மற்றும் வீட்டிலும் உயிருள்ள சக்தி ஒன்று உள்ளது. அவற்றை ஆட்டிப்படிப்பது வாஸ்து.  இது அனைத்து மதத்தினருக்கும் தெரிந்த நம்பிக்கையான ஒன்று. கட்டிடம் அல்லது மனைக்கும், வாஸ்து புருஷனுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கூறும் நிறைய சிற்ப நூல்கள் மற்றும்  மச்சய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  

வாஸ்து புருஷனுடைய உருவான கதையை பற்றிப் பார்ப்போம்:

1. ஒரு சமயம் சிவபெருமானுக்கும் ஒரு அசுரனுக்கு ஏற்பட்ட சண்டையில், மகா ஈஸ்வரனின் வேர்வை துளி பூமியில் விழுந்தது அந்த வியர்வை துளி பூமியையும், வான் வெளியும் தன்னுடைய உடம்பினால் வியாபித்துக்கொண்டு பயங்கர ராட்சச உருவெடுத்தது. அந்த பூதம் பசிக்காக அங்கு இருக்கும் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்தது. இவற்றைப் பார்த்த பிரம்மாவும் மற்ற தேவர்களும் பயந்து சிவனிடம் முறையிட்டனர். அதற்கு சரியான தீர்வையும் சிவபெருமான் கூறினார்.    

2. இந்த பூத உருவை கண்ட பிரம்மா முதலிய தேவர்கள் பயந்து, அவரை எல்லோரும் கூடி அப்பூதத்தைக் குப்புறப் படுத்த நிலையில் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள்.  எந்தெந்தத் தேவர்கள் அப்பூதத்தின் எப்பகுதியைப் பிடித்துக் கொண்டார்களோ அவர்களே உடலின் அப்பகுதிக்கு அதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக முக்கிய மூலைகளான வடக்குத் திசைக்கு குபேரனும்,  கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு யமனும், மேற்கில்  வருணனும் அதிபதிகளாவார்கள்.

3. முக்கியமான எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான தேவர்களை அட்டதிக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். குப்புறப் படுக்க வைத்த பொழுது - தலை வடகிழக்கு  திசையில் சிவனின் பாதத்தை சரணாகதி அடைவதாக இருந்தது அதையே ஈசான்ய மூலை என்றும், அவருடைய கால்பகுதி அதாவது தென்மேற்கு பகுதி - நைருதி மூலையாகவும், மற்ற மூலைகள் அக்னி, வாயு மூலைகளாக புராணங்கள் கூறப்படுகிறது. அவரை பின்புறம் 45 தேவர்கள் சுற்றி இருப்பதாகவும் அதுவே வாஸ்து புருஷ மண்டலத்தில் பல்வேறு கட்டங்கள் 45 தேவர்களுக்கு அதிபதிகளாகக் கருதப்படுகின்றனர். 

4. வாஸ்து பூதமானது தன்னை எவ்வளுவு காலம் இப்படிப் படுக்க வைப்பீர்கள் என்னுடைய பசியை எப்படி தீர்ப்பீர்கள் என்று தேவர்களை கேட்க. அதற்கு பிரம்ம தேவன் "இந்த பிரபஞ்சம் முடியும் வரை நீங்கள் இப்படிதான் இருக்கவேண்டும்,  உங்களுக்கு வாஸ்து பூஜை பொழுது உணவு அளிக்கப்படும் என்றும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் வீடு கட்டுபவர்களுக்கு உங்கள் நல் ஆசீர்வாதத்தை கொடுக்கவும், உங்களுக்கென்று ஒரு விழிக்கும் காலம் என்று 8  மாதங்களில் ஒன்றரை மணிநேரம் உள்ளது” என்று கூறினார்கள். இது சிவபெருமானின் கட்டளை கீழ் நடந்தேறியது. அதனால் தான் பிரமஸ்தானம் வயிறுபகுதி மற்றும் மற்ற உடற்பகுதி பாதிக்கப்படா வண்ணம் வீடு அமைக்கப்பெற்ற வேண்டும்.

வாஸ்து புருசன் நேரம்

வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரம் என்பது ஒரு சுப தன்மை கொண்டது. இவர் ஒரு கும்பகர்ணனைப் போல தூங்குவதாகவும் அவர் வருடத்தில் குறிப்பிட்ட எட்டு மாதங்களில் 3 3/4 நாழிகைதான் விழித்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. பிரம்மனால் உருவாக்கப்பட்ட  வாஸ்து பூதம்  குறிப்பிட்ட இந்த 8 மாதங்களில் 1½ மணி நேரம் நித்திரையிலிருந்து விழித்திருப்பார். அதில் 18 நிமிடம் மட்டும் விழித்து தன் பணிகளான பல் துலக்குவது, ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல்  என்று பல காரியங்களைச் செய்வதாக ஐதீகம். கடைசி மறுபாதி வாஸ்து செய்வதற்கான சுப தினம் என்று கூறப்படுகிறது.  அந்த கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே 'பூமிபூஜை' மற்றும் 'வாஸ்து பூஜை' செய்வதற்கு ஏற்ற நேரம். அப்பொழுதுதான் வஸ்துவுக்குப் பூஜை செய்து  உணவளிப்பது என்பது ஒரு உன்னதமான செயலாகும். அன்று தோஷம் உள்ளவர்களுக்கு கூட அது சுப தன்மை ஏற்படுத்தும்.

வாஸ்து புருசன் விழித்திருக்கும் நாட்கள் கீழே குறிப்பிட்டுள்ளன:


வாஸ்து தெய்வத்தின் ஈசனுக்கு உரிய தலை, பிரம்மனுக்குரிய உடல், கால் போன்றவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மற்றும் பஞ்சபூத தத்துவப்படி மனையில் இருத்தல் வேண்டும். வாஸ்து புருஷ மண்டலத்திற்கு ஏற்ப நாம் வாழும் வீடு அல்லது அலுவலகம் கட்டும்பொழுது வீடும் அங்கு வாழ்பவர்களும் சீரும் சிறப்புமாக விளங்குவார்கள் என்பது வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. வாஸ்து புருஷன் என்னும்  கடவுளுக்குத் தனி மரியாதையும், அவருக்கு உரிய வாஸ்து பூஜைகளும் செய்யவேண்டும். அதற்கென்று ஒரு வழிமுறை உள்ளது. தோஷம் உள்ள அனைத்து ஜாதகருக்கு அந்த நேரத்தில் எந்தவித நற்காரியமும் செய்யலாம்

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com