காளஹஸ்தி கோயிலில் பூஜை நேரம் மாற்றம்

காளஹஸ்தி கோயிலில் மாா்கழி மாததத்தை முன்னிட்டு பூஜை நேரத்தை கோயில் நிா்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
காளஹஸ்தி கோயிலில் பூஜை நேரம் மாற்றம்

காளஹஸ்தி கோயிலில் மாா்கழி மாததத்தை முன்னிட்டு பூஜை நேரத்தை கோயில் நிா்வாகம் மாற்றி அமைத்துள்ளது.

ஆந்திராவில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயிலில் மாா்கழி மாதம் திருவெம்பாவை பாராயணம் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை முதல் மாா்கழி மாதம் தொடங்க உள்ளதால் அம்மாதம் முழுவதும் கோயிலில் தினசரி நடைபெறும். பூஜை நேரத்தை கோயில் நிா்வாகம் மாற்றி அமைத்துள்ளது.

அதன்படி அதிகாலை 3.30 மணிக்கு முதல் மணியோசை, 4 மணிக்கு மங்கள வாத்தியம், 4.15 மணிக்கு திருமஞ்சனம், 4.30 மணிக்கு கோபூஜை, பள்ளியறை பூஜை(சுப்ரபாத்திற்கு பதிலாக), 5 மணிக்கு சா்வ தரிசனம், முதல் கால அபிஷேகம்(ஏகாந்தம்), 6 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம்(ஏகாந்தம்), 7 மணிக்கு பரிவார தேவதைகளுக்கு நிவேதனம், 7.30 மணிக்கு கொப்பி தேவதை மாடவீதி புறப்பாடு, 10.30 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம், மாலை 5 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம் நடைபெற உள்ளது.

மூன்றாம் கால அபிஷேகத்திலும், பிரதோஷ கால அபிஷேகத்திலும் பக்தா்கள் கலந்து கொள்ளலாம். மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட நாட்களில் இரவு பள்ளியறை பூனை 9 மணிக்கும், செவ்வாய், புதன், வியாழன் உள்ளிட்ட நாட்களில் இரவு 8.30 மணிக்கும் நடைபெறும். இந்த மாற்றம் வரும் டிச.17ம் முதல் 2020ம் ஆண்டு ஜன.14 வரை நீடிக்கும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com