
காளஹஸ்தி கோயிலில் குடும்பத்துடன் வழிபட்ட தமிழக நீதிபதிகள்.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள், குடும்பத்துடன் காளஹஸ்தி கோயிலில் திங்கள்கிழமை காலை வழிபட்டனர்.
ஆந்திராவில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயிலுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி தாரணி மற்றும் சேலம் மாவட்ட நீதிபதி பத்மா உள்ளிட்டோர் திங்கள்கிழமை காலை வழிபாட்டிற்காக வந்தனர்.
அவர்களை கோயில் அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். முதலில் ராகு-கேது பரிகார பூஜை செய்த அவர்கள், காளஹஸ்தீஸ்வரனையும், ஞானபிரசுனாம்பிகை அம்மனையும் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு கோயில் அதிகாரிகள் வேத ஆசீர்வாதம் செய்து, ஸ்வாமி பிரசாதம், திருவுருப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.