குருநானக் ஜெயந்தி: பாகிஸ்தான் குருத்வாராவில் 1,100 சீக்கியர்கள் வழிபாடு

பாகிஸ்தானின் உள்ள பஞ்சாப் சாகிப் குருத்வாராவில் இந்தியாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வழிபாடு நடத்தினர். 
gurudwara
gurudwara

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சாகிப் குருத்வாராவில் இந்தியாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வழிபாடு நடத்தினர். 

ஹசானாப்தால் நகரத்தில் உள்ள பழமையான பஞ்சாப் சாகிப் குருத்வாரா உள்ளது. சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கின் பிறந்த தினம் ஒவ்வொரு வருடமும்  விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் குரு நானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி ஏராளமானோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். 

இதனை முன்னிட்டு அவரது பிறந்த இடமான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நன்கானா சாஹிப் பகுதிக்கு சென்று வழிபட சீக்கியர்கள் 1,100 பேருக்கு பாகிஸ்தான் அரசு  விசா அளித்துள்ளது. அதன்படி சீக்கியர்கள் வாகா எல்லை வழியாக முறையான விசா பெற்று வந்திருந்தனர். 

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு குருத்வாரா பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவிலிருந்து நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் வரை 4 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கர்தார்பூர் சாலையை நவம்பர் 9-ம் தேதி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் திறந்து வைக்க உள்ளார். குருத்வாராவில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com