நாமக்கலில் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா

நாமக்கல் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 
நாமக்கலில் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா

நாமக்கல் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

ராசிபுரம் அடுத்த அத்திபலகனூரில் உள்ள நித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு திருவிழா இன்று காலை பூச்சாட்டுதலுடன் விமரிசையாகத் தொடங்கியது. 

அதில் பூவோடு எடுத்து கோயிலைச் சுற்றி வலம் வருதல், உருளுதண்டம் போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ச்சியாகப் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், பெண்கள் தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டியும் தொழில் வளர்ச்சி பெறவும் கோரி சாட்டையடி வாங்கினர். 

இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com