Enable Javscript for better performance
sabarimala temple to be open for karthigai month pooja- Dinamani

சுடச்சுட

    

    கார்த்திகை மாத பூஜைகளுக்காக நவ.16-ல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

    Published on : 08th November 2019 06:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sabarimalai temple

    சபரிமலை ஐயப்பன் கோயில்


    சபரிமலை ஐயப்பன் கோயில் கார்த்திகை மாத பூஜைகளுக்காக வருகிற 16-ம் தேதி மாலை 5.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். 

    மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி மாலை 5.00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்னர், மறுநாள் வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. 

    பூஜையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai