Enable Javscript for better performance
காஞ்சிபுரம் அழகு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் நாளை மஹா ஸம்ப்ரோக்ஷணம்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் அழகு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் நாளை மஹா ஸம்ப்ரோக்ஷணம்

    Published on : 09th November 2019 05:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    perumal_thaayar

     

    காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அழகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. 

    அன்னாத்தூர் அருகில் ஆலப்பாக்கம் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அழகு சுந்தர வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஐப்பசி 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11-ம் தேதி காலை 9.30-க்குள் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. 

    ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ரங்க ராமானுஜ மஹா தேசிகன் ஸ்ரீ வராஹ மஹா தேசிகன், ஸ்ரீ அஹோபில மடம் 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாதத யதீந்த்ர மஹா தேசிகன் அனுக்கிரகத்துடன் நடைபெறுகிறது.

    பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்து பெருமாள் பிராட்டி, ஆழ்வார், ஆச்சார்யர்கள் அருளைப் பெறலாம். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai