மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.16-ல் திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.  
சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. 

பிரசித்தி பெற்ற ஐப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும், மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதன்படி வரும் 16-ம் தேதி மாலை தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்து தீபாராதனை வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளாா். 

மறுநாள் காலை காா்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாள்களுக்கும் தொடா்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும். அதிகாலையில் நிா்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சாா்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடா்ந்து நடைபெறும்.

மண்டல பூஜை டிசம்பா் 27-ம் தேதி நடைபெறும். மண்டல கால பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் 10 ஆயிரம் போலீசாா் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com