தரித்திரத்தைப் போக்கி சகல சௌபாக்கியங்களும் தரும் கோதூளி லக்னம்

பசுக்களில் நான் காமதேனு என்கிறான் பகவான் கிருஷ்ணன். அந்தப் பசுவை கன்றுடன் பூஜித்தால்
தரித்திரத்தைப் போக்கி சகல சௌபாக்கியங்களும் தரும் கோதூளி லக்னம்

பசுக்களில் நான் காமதேனு என்கிறான் பகவான் கிருஷ்ணன். அந்தப் பசுவைக் கன்றுடன் பூஜித்தால் நமக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் மட்டுமல்லாது கோடான கோடி தேவர்களின் அருளும் பூரணமாகக் கிட்டும். 

சாயங்காலத்தில் கோக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது முகூர்த்த சாஸ்திரம்.

பசுவின் கழுத்தில் மணி கட்டி இருக்கும். அந்த மணி சத்தத்துடன் வயிறார உண்ட மகிழ்ச்சியுடன் மண் "தூசி" பறக்க தன் இருப்பிடம் வந்து சேரும் நேரம் அஸ்தமன கால கோதூளி லக்னம் எனப்படும். இந்த நேரம் மகாலெட்சுமி வரும் நேரம் என்பார். 

அஸ்தமன கால கோதூளி லக்னம் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்ததாகும். இந்த மஹாலட்சுமி நேரம் கோதூளி லக்னம் எனப்படும். கோதூளி லக்னத்தில் கால் அலம்பி விளக்கேற்றிவைத்து ஊதுபத்தி மணம் பரப்பி மகாமுஹூர்த்தத்தில் வீட்டை சுத்தம் செய்து நாமும் சுத்தமாக முகம் கைலக்ஷமியின் ஸ்தோத்திரங்கள், ஸ்ரீ அன்னபூர்னாஷ்டகம், சப்த கன்னி தேவியர் ஸ்தோத்திரங்கள் ஆகியவை படித்து ஸ்ரீமகாலக்ஷமியை வரவேற்பது தரித்திரத்தைப் போக்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

கோதூளி லக்னத்தில் கோபூஜை செய்வதினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜைசெய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். பசுவின் உடலில் சகல தேவர்களும், ஐஸ்வரியம் இருக்கிறது என்று நம் வேத சாஸ்திரம் கூறுகிறது. இந்த நேரத்தில் எல்லா சுப காரியங்கள் செய்யலாம் கிரக தோஷம் எதுவும் செய்யாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com