ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி இன்று! விநாயகர் கோயிலுக்குப் போக மறக்காதீங்க!

இன்று ஐப்பசி மாதத்து சங்கடஹர சதுர்த்தியாகும். பௌர்ணமிக்கு அடுத்துவரும் நான்காம் நாள் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தியாகும். 
ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி இன்று! விநாயகர் கோயிலுக்குப் போக மறக்காதீங்க!

இன்று ஐப்பசி மாதத்து சங்கடஹர சதுர்த்தியாகும். பௌர்ணமிக்கு அடுத்துவரும் நான்காம் நாள் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தியாகும். 

வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப் பெருமான். சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயகருக்கென உருவான அருமையான விரதமாகும்.

சங்கடம் என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.

சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் கிடைக்கும்.

அனைத்து விநாயகர் கோயிலிலும் இன்று மாலை நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.

உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் மட்டும் உபவாசம் இருக்கலாம். வேலைக்குச் செல்பவர்கள், உபவாசம் இருக்கமுடியாதவர்கள் மாலை கோயிலுக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபட்டு வரலாம்.

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய |

ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய ||

மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது |

அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா ||

சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் காரியம் சித்தி அடையும். திருமணத் தடை அகலும், கடன் தொல்லை தீரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com