கார்த்திகை முதல் சோமாவாரம்: சகல சிவாலயங்களிலும் சங்காபிஷேகம்

கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமை இன்று. அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 
கார்த்திகை முதல் சோமாவாரம்: சகல சிவாலயங்களிலும் சங்காபிஷேகம்

கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமை இன்று. அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சகல சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறும். 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளில் நீர் நிரப்பி வேள்வி பூஜை செய்து அந்த நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். அந்த சங்காபிஷேகத்தைக் காண கண்கோடி வேண்டும்!!

சிவாலயங்களில் நடைபெறும் இந்த சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டால் நோய்கள் நீங்கும், ஆயுள் கூடும், மன அமைதி கிட்டும், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். 

இன்று நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டு சிவபெருமானின் அருட்கடாட்சத்தைப் பூரணமாகப் பெறுவோம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com