ஐயப்பனின் திருவாபரணத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் 

பந்தளத்தில் ஐயப்பனின் திருவாபரணத்தைப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஐயப்பனின் திருவாபரணத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் 

பந்தளத்தில் ஐயப்பனின் திருவாபரணத்தைப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் தொடர்ந்து 53 நாட்களுக்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். 

கார்த்திகை மாதம் சீசன் தொடங்கிய நிலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அனைத்தும் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்திகை முதல் நாள் காலை 5.00 மணி முதல் மக்கள் பார்க்கத் தொடங்கினர்.

ஐயப்பன் திருவாபரணத்தை டிசம்பர் 27-ம் தேதி வரையும், அதன்பின் டிசம்பர் 31 முதல் ஜனவரி 13 வரையிலும் காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com